அருள்மிகு ஸ்ரீ மகா பிரத்தியங்கர காளிகா திருக்கோவில்.
காலகண்டி, பைரவ மஹிஷி, நரசிம்மி, அதர்வண காளி என பிரத்தியங்கரா தேவி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
சிம்ம முகம், 18 கரம், கரிய நிறத்துடன் சூலம், பாசம், டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திவாறு இருக்கிறாள்.
பிரத்தியங்கிரா தேவி சரபரின் மனைவியருள் ஒருத்தியாவார்.
இவர் சரபேஸ்வரரின் நெற்றிக்
கண்ணிலிருந்து தோன்றியவர் என கருதப்படுகிறார்.
யாக குண்டத்தில் கொட்டப்படும் கிலோ கணக்கில் மிளகாய் கொட்டப்பட்டாலும், அதிலிருந்து, மிளகாய் நெடியோ,கண் எரிச்சல், இருமலோ கூடியிருக்கும் பக்தர்களுக்கு ஏற்படுவதில்லை. மாறாக அதிலிருந்து நறுமணம் தான் வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இரண்டாவது சிப்காட் பகுதி,
மோரனப்பள்ளி, ஓசூர்.