அருள்மிகு
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ மருதீசுவரர் திருக்கோயில்.
தெற்குத் திசை நோக்கிய சன்னதியைக் கொண்டு இக்கோயிலில் இறைவி ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருளியிருக்கிறார்.
64 சக்தி தலங்களில் கூத்தைப்பார் அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை மருதீசுவரர் திருக்கோயிலும் ஒன்று.
சிதம்பரம் நடராசர் கோயிலுக்கும் - மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கும் மத்தியிலுள்ள ஊரில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இங்குள்ள இறைவன் மத்யார்ஜுனேசுவரர் என்றழைக்கப்
படுகிறார்.
இக்கோயிலின் தல விருட்சமாக வன்னிமரம் அமைந்துள்ளது. மற்ற கோயில்களில் இல்லாத வகையில், இறைவி ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரிலேயே தல விருட்சம் அமைந்திருப்பது விஷேஷம்
கூத்தைப்பார்,
திருவெறும்பூர் வட்டம்,
திருச்சி மாவட்டம்.