குன்றத்தூர் அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷி அம்மன் உடனுறை ஸ்ரீ நாகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில்.
தொண்டை மண்டல நவகிரஹ ஸ்தலங்களில் ராகு ஸ்தலமாக வணங்கி வருகிறார்கள்.
ராகு பரிகார ஸ்தலம்...
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்.
இந்த ஆலயத்தை பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் பெருமான் நிறுவினார்.
குலோதுங்க இரண்டாம் சோழன் காலத்தில் அவருடைய அவையில் மந்திரியாக பணி புரிந்தவர் சேக்கிழார் பெருமான்.
இவர் கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவில் கண்டு வியந்து அதே மாதிரி இங்கு ஒரு கோயில் கட்ட நினைத்தார்.
அந்த லிங்கத்திற்கு நாகாபரணம் அணிவித்து அழகு பார்த்தார்.
அதனால் இந்த ஈஸ்வரருக்கு நாகேஸ்வரர் என பெயரிடப்பட்டதாம்.
ஈஸ்வரரின் நாகாபரணம் தான் ராகு பகவானாக சேவி்க்கப்படுகிறது.
குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்..