அருள்மிகு ஸ்ரீ பூங்கோவல் நாச்சியார் சமேத ஸ்ரீதிருவிக்கிரமர் (உலகளந்த பெருமாள் திருக்கோவில்).
தல விருட்ஷம் புன்னை மரம்.
தீர்த்தம்: பெண்ணை ஆறு, கிருஷ்ண தீர்ந்தம், ஸ்ரீ சக்ர தீர்த்தம்.
இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்த கோவிலின் பெருமாள் திருவுருவம் ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார். கோபுர நுழைவாயில்கள் கோவிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக அமைந்துள்ளது.
இந்த திருக்கோவிலூரில் உள்ள திருமால் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். திருவிக்கிரமன் பத்தினி (திருவிக்கிரமி) மிருகண்டு, மகாபலி எல்லோரும் காலடியிலேயே இருக்கிறார்கள்.
திருக்கோவிலூர். விழுப்புரம் மாவட்டம்