Breaking News :

Thursday, November 21
.

இராம நாம மந்திரம் சொன்னால் என்ன பலன்?


1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.

2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும்.

3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய தூக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.

4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்.' அந்த நாள் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.

6. ' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்.

7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!

8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும். இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள்.

9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும்.

10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு.

11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.

12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது (சப்தரிஷி பூஜையின் போது ) ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

13. பெண்களின் இயற்கை உபாதை நாட்களிலும் 'ராம நாமா' சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ......அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.

14. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும்.

15. 'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.

சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு ..... அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! ..... யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய்... செடியாய்... பறவையாய்.... விலங்காய் இருந்தோமோ ! என்னவோ ........ அப்புண்ணிய பலனை ..... ராமனே அறிவான்.

'ராம நாமா' சொல்வோம் !

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.