Breaking News :

Thursday, November 21
.

ஸ்ரீ ராமர் 108 போற்றி


1. ஓம் அயோத்தி அரசே போற்றி

2. ஓம் அருந்தவ பயனே போற்றி

3. ஓம் அச்சுதானந்த கோவிந்த போற்றி

4. ஓம் அளவிலா புகழுடையோய் போற்றி

5. ஓம் அபயம் அளிக்கும் விரதா போற்றி

6. ஓம் அறத்தின் நாயகனே போற்றி

7. ஓம் அன்பர் இதயம் உறைவோய் போற்றி

8. ஓம் அழகிய திருமுகத்தோய் போற்றி

9. ஓம் அழகு சீதாபதியே போற்றி

10. ஓம் அகிலமெல்லாம் காப்பாய் போற்றி

11. ஓம் அச்சம் அகற்றினாய் போற்றி

12. ஓம் அகலிகை சாபம் தீர்த்தாய் போற்றி

13. ஓம் அற்புத நாமா போற்றி

14. ஓம் அறிவுச்சுடரே போற்றி

15. ஓம் அளவிலா குணநிதியே போற்றி

16. ஓம் அன்புள்ள ஆரமுதே போற்றி

17. ஓம் அரக்கர்க்கு கூற்றே போற்றி

18. ஓம் அனுமன் அன்பனே போற்றி

19. ஓம் அன்பு கொண்டாய் போற்றி

20. ஓம் அனந்த கல்யாண குணா போற்றி

21. ஓம் அஸ்வமேத யாக பிரபுவே போற்றி

22. ஓம் ஆதித்தன் குலக்கொழுந்தே போற்றி

23. ஓம் ஆற்றல் படைத்தாய் போற்றி

24. ஓம் ஆதரவில்லார் புகலிடமே போற்றி

25. ஓம் ஆத்மசொரூபனே போற்றி

26. ஓம் ஆதிமூலமே போற்றி

27. ஓம் இளையவன் அண்ணலே போற்றி

28. ஓம் இன்சுவை மொழியே போற்றி

29. ஓம் இகபர சுகம் அளிப்பாய் போற்றி

30. ஓம் உண்மை வடிவமே போற்றி

 

31. ஓம் உத்தம வடிவே போற்றி

32. ஓம் உலகம் காக்கும் உறவே போற்றி

33. ஓம் ஊக்கம் தரும் சுடரே போற்றி

34. ஓம் ஊழி முதல்வா போற்றி

35. ஓம் எழில் நாயகனே போற்றி

36. ஓம் ஏழுலகம் காப்பவனே போற்றி

37. ஓம் ஏழு மரம் துளைத்தவனே போற்றி

38. ஓம் ஏக பாணப்பிரயோகா போற்றி

39. ஓம் ஏக பத்தினி விரதனே போற்றி

40. ஓம் ஐம்புலன் வென்றோய் போற்றி

41. ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி

42. ஓம் ஓம்கார தத்துவமே போற்றி

43. ஓம் ஓங்கி உலகளந்த அம்சமே போற்றி

44. ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி

45. ஓம் கருப்பொருளே போற்றி

46. ஓம் கரனை அழித்தோய் போற்றி

47. ஓம் காமகோடி ரூபனே போற்றி

48. ஓம் காமம் அழிப்பவனே போற்றி

49. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி

50. ஓம் காலத்தின் வடிவே போற்றி

51. ஓம் காசி முக்தி நாமா போற்றி

52. ஓம் குரு பக்த ரத்தினமே போற்றி

53. ஓம் கோசலை மைந்தா போற்றி

54. ஓம் கோதண்ட பாணியே போற்றி

55. ஓம் சங்கடம் தீர்க்கும் சத்குருவே போற்றி

56. ஓம் சத்ய விக்ரமனே போற்றி

57. ஓம் சரணாகத வத்சலா போற்றி

58. ஓம் சபரிக்கு மோட்சம் தந்தாய் போற்றி

59. ஓம் சொல் ஒன்று கொண்டாய் போற்றி

60. ஓம் சோலை அழகனே போற்றி

 

61. ஓம் சோகம் தீர்ப்பாய் போற்றி

62. ஓம் தசரதன் தவப்புதல்வா போற்றி

63. ஓம் தந்தை சொல் கேட்டாய் போற்றி

64. ஓம் தியாகமூர்த்தியே போற்றி

65. ஓம் நிலையானவனே போற்றி

66. ஓம் நித்ய மங்கள வைபவா போற்றி

67. ஓம் நீலமேக சியாமளனே போற்றி

68. ஓம் பங்கஜகண்ணனே போற்றி

69. ஓம் பரந்தாமா பாவநாசா போற்றி

70. ஓம் பத்துத்தலை அறுத்த பரம்பொருளே போற்றி

71. ஓம் பண்டரிநாதா விட்டலா போற்றி

72. ஓம் பரத்வாஜர் தொழும் பாதனே போற்றி

73. ஓம் பட்டாபிஷேக மூர்த்தியே போற்றி

74. ஓம் பரதனின் அண்ணனே போற்றி

75. ஓம் பாதுகை தந்தாய் போற்றி

76. ஓம் பிறவி அறுப்பாய் போற்றி

77. ஓம் மாசிலா மணியே போற்றி

78. ஓம் மாருதியின் பிரபுவே போற்றி

79. ஓம் மாதவச்செல்வமே போற்றி

80. ஓம் மா இருள் விலக்குவாய் போற்றி

81. ஓம் மாயமான் மாய்த்தாய் போற்றி

82. ஓம் மாயவாழ்வு முடிப்பாய் போற்றி

83. ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி

84. ஓம் முன்னைப்பரம்பொருளே போற்றி

85. ஓம் ரகு வம்ச நாயகா போற்றி

86. ஓம் லவகுசர் தந்தையே போற்றி

87. ஓம் வல்லமை கொண்டாய் போற்றி

88. ஓம் வாயுகுமாரன் இதயமே போற்றி

89. ஓம் வானரர்க்கு அருளினாய் போற்றி

90. ஓம் விண்ணவர் தெய்வமே போற்றி

 

91. ஓம் விஷயம் கடந்தவனே போற்றி

92. ஓம் விருப்பு வெறுப்பற்றவனே போற்றி

93. ஓம் விஜயராகவனே போற்றி

94. ஓம் விஸ்வாமித்திரர் வேள்வி காத்தாய் போற்றி

95. ஓம் வீபீஷணன் நண்பனே போற்றி

96. ஓம் வெற்றிக்கு ஒருவனே போற்றி

97. ஓம் வேண்டுவன ஈவாய் போற்றி

98. ஓம் வேடனொடும் ஐவரானாய் போற்றி

99. ஓம் வேத முதல்வா போற்றி

100. ஓம் வேந்தர் வேந்தா போற்றி

101. ஓம் வேதனை தீர்ப்பாய் போற்றி

102. ஓம் வேதம் தேடும் பாதனே போற்றி

103. ஓம் வேதாந்த சாரமே போற்றி

104. ஓம் வைகுண்ட வாசா போற்றி

105. ஓம் வைதேகி மணாளா போற்றி

106. ஓம் வையகப் பிரபுவே போற்றி

107. ஓம் வையகத்தை வாழ வைப்பாய் போற்றி

108. ஓம் ஸ்ரீசீதா லட்சுமண பரத சத்ருக்கன ஹனுமத் சமேத ராமச்சந்திர மூர்த்தியே போற்றி! போற்றி

 

திருமாலின் ஏழாவது அவதாரமான, அயோத்திய ராஜ்ஜியத்தின் அரசரான ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியை போற்றும் 108 துதி இது. இந்த துதியை தினமும் காலையில் குளித்து முடித்ததும், பெருமாளின் படத்திற்கு பூக்கள் சாற்றி இந்த போற்றி துதியை படிப்பது நல்லது.

 

புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு தீபம் ஏற்றி, இந்த போற்றி துதியை படிப்பதால் உங்களிடம் இருக்கின்ற தீய எண்ணங்கள், நடத்தைகள், துஷ்ட சக்திகளின் தாக்கங்கள் நீங்கும். போதை மற்றும் இன்னபிற தீய பழக்கங்களுக்கு அடிமையான உங்களுக்கு நெருக்கமானவர்கள் அவற்றிலிருந்து விடுபடுவர். எதிரிகள் தொல்லை ஒழியும். மன உறுதி, தைரியம் அதிகரிக்கும். திருமணமாகாத ஆண், பெண்கள் தங்களின் மனதிற்கினிய கணவன் – மனைவி கிடைக்க பெறுவார்கள்.

 

திருமால் எடுத்த தசாவதாரங்களில் ஏழாவது அவதாரம் அயோத்தி சக்கரவர்த்தி தசரதரின் குமாரராக எடுத்து ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதாரமாகும். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்கிற வாக்கியத்திற்கு உதாரண புருஷராக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி. அரசர் குலத்தில் பிறந்திருந்தாலும் அனைவரையும் சமமாக கருதும் மனப்பான்மையும், எதிரிக்கும் கருணை காட்டுகின்ற குணமும் கொண்டவர் ஸ்ரீ ராமர். பிறப்பு முதல் முக்தி அடையும் வரை வாழ்வில் எப்போதும் தன் சுகங்களை மட்டும் கருதாமல், பிறரின் நன்மைக்காக தனது இன்பங்களையும் தியாகம் செய்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பாதம் பணிபவர்களுக்கு அனைத்தும் நன்மையாகவே முடியும்.

 

ஜெய் சீதா ராம் 

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.