நெல்லை நெல்லையப்பர் காந்திமதி ஆனிப்பெருந் தேர்த்திருவிழா. இன்று ஐந்தாம் நாள் திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி-அம்பாள் இந்திர விமானத்திலும் திருவீதிவுலா நடைபெற்றது.
நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வீதியுலா வந்தன. இன்று ஐந்தாம் நாள் திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி-அம்பாள் இந்திர விமானத்திலும் திருவீதிவுலா நடைபெற்றது.
அப்போது ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். மேலும் மாலை கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இசை மற்றும் பொம்மலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.