செந்தாமரை - நல்ல தனத்தையும், வியாபார விருத்தியுடன் ஆத்ம பலத்தையும் தகப்பனாருக்கு ஆயுள் பலத்தையும் , சூரிய பகாவனின் அருளையும் பெற்றுத் தரும்.
சிவப்பு அரளி - தாங்க முடியாத கவலைகளைத் தீர்த்து, குடும்ப ஒற்றுமையைக் கூட்டி வைக்கும்.
வெண்தாமரை - வெள்ளை நந்தியாவட்டை - மல்லிகை இருவாட்சி போன்றவை மன சஞ்சலத்தைப் போக்கும்.மனதில் தெளிவு பிறக்கும்.
மஞ்சள் அரளி - பொன் அரளி - மலர்கள் கடன் தொல்லையை நீக்கும். கன்னியருக்கு திருமணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். குருகிரகப் பீடையை நீக்கும்.
பாசிப் பச்சையும், மருக்கொழுந்தும் நல்ல விவேகத்தையும், சுகபோகங்களையும், புத கிரக அருளையும் பெற்றுத் தரும்.
நீலச் சங்கு புஷ்பம் , நீலக் கனகாம்பரம் போன்றவை அவச் சொற்கள் , தீராத அபாண்டங்கள் , தரித்திரம் ஆகிய வற்றைத் தீர்க்கும். சனி பகவானின் அருளையும் பெற்றுத் தரும். ஆயுளைப் பெருக்கும்.
வில்வ புஷ்பம், கருந்துளசிப் புஷ்பம், மகிழ மலர் ஆகியவை இராகு, கேது தோஷங்களை தீர்த்து.வாழ்வில் வளம் தரும்.
அடுக்கு அரளி , செம்பருத்தி போன்றவை ஞானம் மற்றும் தொழில் விருத்தி போன்றவற்றைத் தரும்.
பாரிஜாதம், அல்லிப் பூ, மங்கிய வெள்ளைப் புஷ்பங்கள் சிறந்த பக்தியையும், அதிர்ஷ்டங்களையும் தரும்.தாயாரின் ஆயுளை கூட விருத்தி செய்யும், சந்திர கிரகப் பிரீதியைத் தரும்.
மலராது என்று தெரிந்த மொட்டுகளையும் , காலில் மிதிக்கப்பட்ட புஷ்பங்களையும் பூஜைக்குப் பயன்படுத்துதல் கூடாது.