Breaking News :

Wednesday, February 05
.

வாழ்வில் மாற்றம் வர தாந்த்ரீக பரிகாரங்கள்?


நாம் நல்வாழ்விற்காக என்னதான் இறைவழிபாடுகள் செய்தாலும் ஆலயம் சென்றாலும் நம்மையும் நம் இருப்பிடத்தையும் சுற்றியுள்ள விஷயங்களில் ரிஷிமார்கள் கூறிய தாந்த்ரீக விதிகளின் படிச் சில சிறிய மாறுதல்களைச் செய்வதன் மூலம் பெரும் நன்மைகளை அடையலாம்.

சில பரிகாரங்கள் சாதாரணமாக இருக்கலாம் நாம் அவற்றை உதாசீனப்படுத்தி கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டு பெரும் துன்பத்தில்,வியாதியில்  அகப்பட்டு அதற்காகப் பெருமளவில் வைத்தியம், பூஜை,யாகம் என்று பெரும் பணம் செலவழித்துக் கொண்டிருப்பபோம்.இப்போது நாம் கீழே பதிவிட்டுள்ள தாந்த்ரீக பரிகாரங்கள் நம் நலவாழ்வில் பெரும் பல அவசியமான  மாற்றங்களைச் செய்யவல்லது.

1.வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில்  வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப்  பாதிக்கும்.

வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை  ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

2. வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

3.கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல்  கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

பரிகாரம்:-
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று .

4.சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால்  வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.    

பரிகாரம்:-
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு  "ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய" என  3 தடவை  ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.