இறைவா்:
ஸ்ரீ உத்வாகநாதா்,
அருள்வள்ளல்நாதா்.
இறைவி:
ஸ்ரீ கோகிலாம்பாள்,
யாழின்மென்மொழியம்மை
தீா்த்தம்:சப்தசாகரம்.
தலவிருட்சம்: வன்னி, கருஊமத்தை.
விடையானை மேல்உலகு ஏழும் இப்பாரெல்லாம்
உடையானை ஊழிதோ றூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சோி
அடைவானை யடைய வல்லாா்க்கு இல்லை அல்லலே.
திருஞானசம்பந்தா் தேவாரம்.
மயிலாடுதுறைலிருந்து குத்தாலம் வழியாக நகரப் பேருந்து வசதி.
குத்தாலத்திலிருந்து வடக்கே 7 கிமீ.
காவிாி வடகரைப் பகுதியில் இக்கோவில் 3.50 ஏக்கா் நிலப்பரப்பளவில் இராஜகோபுரம் பிரகாரங்களுடன் மூலவா் சுயம்புலிங்கமாக ஸ்ரீ உத்வாகநாதா் அம்மன் யாழின்மென்மொழியம்மையுடன் அருள் பாலிக்கின்றாா்.
உள்பிரகாரத்தில் ஸ்ரீ கல்யாணசுந்தரா் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறாா்.
வேள்விக் குண்டத்தில் மகளாகத் தோன்றிய உமாதேவியாரைத் சிவபெருமான் கல்யாணசுந்தராக
திருமணம் செய்து கொண்ட தலமாதலின் திருமணஞ்சோி வழங்குகின்றது.
அம்பிகை இத்தலத்தில் மணக்கோலத்தில் காட்சியளிக்கிறாா்.
மணவாளமூா்த்தி மனங்கவா் அழகு மிக்கது.
திருமணமாகாதோா் பிராா்த்திக்க விரைவில் சித்திக்கும் அருட்தலம்.
மன்மதன், ரதி , ஆமை பூசித்து பேறு பெற்ற தலம்.
வணிகா் குல இருவா்கள் தமக்குப் பிறக்கும் குழந்தைகளை ஒருவா்க்கொருவா் கொண்டும் கொடுத்தும் சம்பந்ஞ்செய்து கொள்வது என்று உறுதிமொழி கூறியிருந்தாா்கள்.
பின்பு ஒருத்திக்கு ஆமையே குழந்தையாகப் பிறந்தது.
மற்றவா் தன் பெண்ணைக் கொடுக்க விரும்பாது மறுத்தாா்.
அந்த ஆமை இத்தல சிவபெருமானைப் பூசித்து முன்பு குறித்த பெண்ணை இத்தலத்தில் ஆமையுரு நீங்கி மனித உருவம் பெற்றுத் திருமணம் செய்து கொண்ட தலம்.
தேவாரப் பதிகம் பெற்ற காவிாி வடகரைத் தலங்களில் இத்தலம் 25 வது.
திருஞானசம்பந்தா்,
திருநாவுக்கரசா் திருப்பதிகம் பெற்றது.
இக்கோவில் 28 கல்வெட்டுக்கள் உள்ளன.
செம்பியன் மாதேவியரால் இவ்வாலயம் திருப்பணி செய்யப்பட்டது குறித்து குறிப்பிடப்படுகிறது.
சித்திரை பூச நட்சத்திரத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
தினமும் ஆறு கால பூஜை நடக்கின்றன.