சொக்கநாதபெருமானே உம் திருவடி வணங்குகிறேன்
எந்த சூழ்நிலையிலும் நின்னை நினைக்கும் பேரு கொடுத்தாய் ஈசா!
அகில உலகை ஆளும் சொக்கநாத பெருமானே
அண்டத்தையும் பிண்டத்தையும் காக்கும்
ஆலவாய் அரசனே உம் திருவடி போற்றி போற்றி
மூன்று கோடுகளாக பூசுவதின் இரகசியம் என்னவென்றால்
மும்மலங்களை அழிப்பதுடன்
**கடந்த காலம்**
**நிகழ்காலம்**
**எதிர்காலம்**
என மூன்று காலங்களிலும் செய்கின்ற பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமான் திருவடி கிடைக்கும்...
திருநீறு பூசுதல் என்பது மாசில்லாத. சுத்தமான நிலையின் அடையாளமாகும்....
திருநீறானது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது.
அந்தவகையில்
உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதால் அவ்விடங்களில் வலிமை அதிகமாகும் என்ற கருத்து நிலவுகிறது.
இதனால் தான்
திருநீறு பூசுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.
நெற்றியில் திருநீறுபூசுவது மிகவும் முக்கியம்
மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாகக் கருதப்படுகிறது.
நெற்றியில் தான் அதிகமாக வெப்பம் வெளியிடப்படுகின்றது,
உள் இழுக்கவும் படுகின்றது.
சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் அதிர்வுகளை உள்ளனுப்பும் செயலை திருநீறு செய்கிறது.
அதனால் தான் திருநீறை நெற்றியில் கட்டாயம் பூசுகிறார்கள் !
"ஏலாஉடம்பு இடர்தீர்க்கும் இன்பம் தருவது நீறு "
"தேற்றித் தென்னவன் பற்றி தீப்பிணியைத் தீரச்செய்ததும் திருநீறு"
என்கிறார் ஞானசம்பந்தன்.
அனைவர் வாழ்வில் உயர்வடைந்து வேண்டுவன
அனைத்தும் பெற்று மன அமைதியோடு வாழ்ந்திட வேண்டி எம்பெருமான் சிவபெருமானின் திருவடி வணங்குகிறேன்