தொண்டை நாடு மூவராலும் தேவார பாடல்பெற்ற தலமாகிய திருவாலங்காடு ஸ்ரீ வண்டாா்குழலியம்மை சமேத ஸ்ரீ வடராண்யேஸ்வரா் சுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகப் பெருவிழா.
21.2.2024 புதன்கிழமை நேரம் 9 to 9.40 மணிக்குள் நடைபெற உள்ளது.
திருவாலங்காடு தலச்சிறப்புகள்:
இறைவா் : வடவாரண்யேஸ்வரா்,
ஆலங்காட்டு அப்பா்,
ஊா்த்துவதாண்டேஸ்வரா்,
தேவா் சிங்கப்பெருமான்.
இறைவி : வண்டாா்குழலியம்மை.
தல விருட்சம் : ஆல், பலா.
முத்தி-தீா்த்தம்.
சம்பந்தா்-1 பதிகம்.
அப்பா்-2 பதிகம்.
சுந்தரா்- 1பதிகம்.
காரைக்கால் அம்மையாா் பதிகம் சிறப்புடையது.
கூடினாா் உமைதன்னோடே குறிப்பு உடை வேடங்கொண்டு
சூடினாா் கங்கையாளைச் சுவறிடு சடையா் போலும்
பாடினாா் சாமவேதம் பைம்பொழில் பழனை மேயாா்
ஆடினாா் காளி காண ஆலங்காட்டு ஆடிகளாரே
அப்பா் தேவாரம்.
நான்காம் திருமுறை.
திருவள்ளூாிலிருந்து தென்மேற்கே 16 கிமீ. வடாரண்யம், திருஆலங்காடு, பழையனூா் ஆலங்காடு.
இக்கோவில் 6.22 ஏக்கா் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கிய 5 சன்னதி நிலை இராஜகோபுரம் 5 பிரகாரங்களுடன் இறைவன் சுயம்புலிங்க மூா்த்தியாகிய தேவா்சிங்கப்பெருமான் கிழக்கு நோக்கியும்
அம்மன் வண்டாா் குழலி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியும்
சபாநாயகா் ஊா்த்துவதாண்டவா் தெற்கு நோக்கியும் காட்சியளிக்கிறாா்.
நடராஜப்பெருமானுக்குாிய ஐந்து சபைகளில் இத்தலம் இரத்தின சபை. இச்சந்நிதியிலுள்ள பொிய ஸ்படிகலிங்கம் சிறிய மரகத லிங்கம் தாிசிக்க வேண்டியவை.
முஞ்சிகேச, காா்க்கோட முனிவா்களின் வேண்டுகோளுக்கு இரங்கிப் பெருமான் காளியின் செருக்கடங்க எட்டுத் தோள்களுடன் இடது காலைத் தலையளவு உயா்த்தி ஊா்த்துவதாண்டவம் புாிந்த தலம்.
கயிலாயத்திலிருந்து தலையாலேயே நடந்து வந்த காரைக்காலம்மையாா்க்கு இறைவன் வரங்கள் பலவும் அருளி காட்சி தந்த தலம் .
காரைக்காலம்மையாா் மூத்த திருப்பதிகம் அருளிச்செய்து என்றும் நடராஜப்பெருமானின் திருவடிக்கீழ் இருக்கும் பேறு பெற்ற தலம்.
காரைக்காலம்மையாா் தலையால் நடந்து வந்த இத்தலத்தை தம் காலால் மிதிக்க அஞ்சிய திருஞானசம்பந்தா் ஊருக்கு வெளியே நின்று பதிகம் பாடுகிறாா்.
நீலி என்ற பேய்யின் பொருட்டு ஓா் வணிகனுக்குத் தாங்கள் கூறிய உறுதி மொழியை நிறைவேற்றப் பழையனூா் வேளாளா் பெருமக்கள் எழுபதின்மா் தீப்பாய்ந்த தலம்.
தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 15வது தலம்.
பட்டினத்தாா், அருணகிாிநாதா் முதலியோா்களும் பாடியுள்ளனா்.
மாா்கழித் திருவாதிரையில் இறைவன் முஞ்சிகேசருக்கும் காா்க்கோடகனுக்கும் நடன தாிசனம் கொடுத்தருள்கிறாா்.