பஞ்சபூத தலங்களில் நீர் தலமான, திருவானைக்காவல் அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் மகா சிவராத்திரி வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு மங்கல இசை உடன் தொடங்கும் சிவராத்திரி விழா, மறுநாள் 9ம் தேதி காலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற உள்ளது.
இவ்விழாவில், திருமுறை, பக்தி இன்னிசை, சொற்பொழிவு, வரலாற்று நாட்டிய நாடகம், யோகா, மோகினியாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.