Breaking News :

Wednesday, February 05
.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்!


தஞ்சாவூரில் இருந்து திருகருக்காவூர் சாலையில் 10 கி.மீ தொலைவில் உள்ளது திட்டை.. பிரளய காலத்தில் எல்லா இடங்களும் நீரால் சூழ் பட்டிருந்தது .ஆனால் சீர்காழியும் திட்டையும் நீரால் ழூழ படவில்லை .

திட்டை என்றால் மேடு என்று பொருள் .சீர்காழி வட திட்டை என்றும் திட்டை தென் திட்டை என்றும் அன்று முதல் அறியபட்டது .

இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம்,காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சீபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டிவிடும்.

சம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சிதரும் இத்தலம் மேலானது என்றூ குறிப்பிடுகிறார்.

சூரியன் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறான். இதன் அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது.

ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும், பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் சூரிய கிரணங்கள் மூலவர் மீது விழுகின்றன.

வசிஷ்டர் வழிபட்டதால் மூலவர் வசிஷ்டீஸ்வரர்  என்று அறியபடுகிறார். மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் .

நம சிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலய நான்கு மூலைகளிலும்
நான்கு லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. 5வது லிங்கமாக மூலவராக ராமனின் குல குருவான வசிஷ்டர் பூஜித்த வசிஷ்டேஸ்வரர் உள்ளார்.

எனவே, இது  பஞ்சலிங்க ஸ்தலமாக உள்ளது. பஞ்ச பூதங்களுக்கும் தனித்தனியே பாரதத்தில் தலங்கள் உண்டு. ஆனால் ஒரே ஆலயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் ஐந்து  லிங்கங்கள் அமைந்திருப்பது  அதிசயம்.

அம்மன்சன்னதிக்கு முன் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது .12 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்ட பட்டது இந்த கோவில்.

இந்த கோவிலின் தனி சிறப்புஇறைவன்வசிஷ்டேஸ்வரர் சன்னதியில் உள்ள உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

24 நிமிடத்திற்கு அதாவது ஒரு நாழிகைக்கு ஒரு முறை இந்த சந்திர காந்தக்கல்லால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கல்லிலிருந்து ஒரு சொட்டு நீர் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது எப்பொழுதும் விழுந்துகொண்டிருக்கும் .

கூர்ந்து கவனித்தால் இதை பார்கக முடியும்.  இன்னொரு சிறப்பு .

இங்கு குருவுக்கு தனி சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கும் ஈஸ்வரன் சன்னதிக்கும் நடுவில் தனி சன்னதி கொண்டிருக்கிறார் குரு பகவான் . இங்கு குரு நின்ற கோலத்தில்  4 கைகளுடன் காணப்படுகிறார்.சித்ரா பௌர்ணமி அன்றும் குரு பெயர்ச்சி அன்றும் இங்குசிறப்பாக
கொண்டாடபடும் .

எல்லா ஆலயங்களிலும் மூலவராக உள்ள மூர்த்தியே பெரிதும் வழிபடப்பட்டு வரந்தந்து தல நாயகராக விளங்குவது வழக்கம்.

ஆனால் திட்டைத் தலத்தில்  சிவன், உமை, விநாயகர், முருகன், குரு, பைரவர் ஆகிய அறுவரும் தனித்தனியே அற்புதங்கள் நிகழ்த்தி தனித்தனியாக வழிபடப்பட்டு தனித்தனி சன்னதிகளில்  அருள் பாலிக்கிறார்கள்.

எனவே, பரிவார தேவதைகளைப் போல அல்லாமல் மூலவர்களைப் போலவே, அருள்பாலிப்பது அதிசயம்.

பெரும்பாலான ஆலயங்கள் கருங்கல்லினால் உருவாக்கப்பட்டிருக்கும். பழமையான ஆலயங்கள் சில செங்கற்களால் உருவாக்கப் பட்டிருக்கும்.

ஆனால் இங்கு  கொடி மரம்,விமானங்கள், கலசங்கள் ஆகிய அனைத்தும் கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டுமே. உலகில் வேறு எங்கும் இத்தகைய ஆலய  அமைப்பு இருப்பதாக தெரியவில்லை.

இதுஅதிசயம்  பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கும் சென்று தோஷம் நீங்கப் பெறாமையால் திட்டைக்கு வந்து வசிஷ்டேஸ்வரரை ஒரு  மாதம் வரை வழிபட்டு வந்தார்.

வசிஷ்டேஸ்வரர் அவர் முன்தோன்றி என் அம்சமான உன் தோஷம் இன்றுடன் முடிந்து விட்டது. நீ திட்டைத் திருத்தலத்தின்  கால பைரவனாக எழுந்தருளி உன்னை வழிபடுவோருக்கு அருள் செய்வாய் என்று கூறினார்.

அதுமுதல் இத்தலம் பைரவ ஷேத்திரமாக விளங்கி வருகிறது.   ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, கண்டச சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் இந்த பைரவரை அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட சனியால்  ஏற்பட்ட தோஷங்கள் விலகும். இங்கு எழுந்தருளி உள்ள பைரவர் அதிசயம்.

சப்தரிஷிகளுள் ஒருவரான ஆங்கீரஸ முனிவரின் மகனாகிய பிரகஸ்பதி வாழ்வில் உன்னத இடத்தை அடைய வேண்டும் என்ற இலட்சியத்துடன் - கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று சிவபெருமானைக் குறித்து கடுந்தவம் மேற்கொண்டார்.

பிரகஸ்பதியின் தவத்துக்கு இரங்கிய எம்பெருமான் - திட்டைஸ்தலத்தில்அவருக்கு காட்சி கொடுத்தார்.

அதன் பயனாக - கிரக பதவி பெற்று - நவக்ரகங்களில் சுப கிரகமாக ஏற்றம் பெற்றார்.
நவக்கிரகங்களுள்முதன்மையாகி தேவர்களுக்குக் குரு எனும் நிலையைப் பெற்றார்.. வியாழன் எனும் பெயரும் பெற்றார்..

ஒருவருக்கு தலைமைப் பதவி, அதிகாரம், செல்வம், கல்வி, ஒழுக்கம், பிள்ளைப்பேறு ஆகியவை - சுபக்கிரகமாகத் திகழும் குரு பகவானின் கருணையினால்  கிடைக்கிறது. உலகம் முழுதும் உள்ள பொன் பொருள் சுகபோக விஷயங்களுக்கு குருவே அதிபதி.. ஆண், பெண் எவராயினும் அவருடைய திருமணம் தடைப்படுமேயானால், அதை நிவிர்த்தி செய்து அருள்பவர் - குருபகவான்.

இத்திருக்கோயிலில் நவக்கிரக மண்டலம் வேறுபட்டு விளங்குகின்றது.. மேற்கு நோக்கிய சூரியனுக்கு எதிர்முகமாக வியாழகுருவிளங்குகின்றார்.

திருமால், தன் திருக்கரத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தைக் கொண்டு உருவாக்கியதே சக்கரதீர்த்தம்.

ஸ்ரீசக்கரத்தின் வலிமையையும் மகிமையையும் நாம் அறிவோம். அதற்கு இணையாக இருந்து சர்வ வல்லமைகளையும் தரவல்லது, தீயசக்திகளை அழித்து சகல யோகங்களும் தரக்கூடியது இந்த சக்கர தீர்த்தம் என்று போற்றுகிறார்கள் ஞானிகள். கோவிலுக்கு நேர் எதிரில் தீர்த்தம் அமைந்துள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.