திருமலை திருப்பதியில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் பக்தர்கள் வரத்து குறைந்ததிருந்தது. தற்போது பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சமீப காலமாக உண்டியலில் வசூலாகும் காணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
கடந்த 5 மாதங்களில் மாதம் தோறும் உண்டியல் காணிக்கை 100 கோடிக்கும் மேல் வருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.
கடந்த மார்ச் மாத காணிக்கை ரூ. 128 கோடி , ஏப்ரல் மாதத்தில் ரூ.127.5 கோடி, மே மாதத்தில் 129.93 கோடி, ஜூன் மாதத்தில் 120 கோடி, ஜூலை மாதம் இதுவரை 106 கோடி.40 லட்சம் காணிக்கையாக உண்டியல் நிரம்பி வருகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்த ஆண்டு முடிவுக்குள் மொத்தம் ஆண்டு வரவாகும் காணிக்கை ரூ. ஆயிரத்து 500 கோடியை எட்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.