Breaking News :

Thursday, November 21
.

அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில், திருநெல்வேலி


மூலவர்: – உச்சிஷ்ட கணபதி
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: – திருநெல்வேலி
மாவட்டம்: – திருநெல்வேலி
மாநிலம்: – தமிழ்நாடு

விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை கட்டித்தழுவி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும். வடமாநிலங்களில் உச்சிஷ்ட கணபதிக்கு விளக்கம் தரும் போது, “பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்தவர்‘ என்பர்.

இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. கோயிலைச் சுற்றி இடிபாடுகளுடன் கூடிய மதில் சுவர்களின் நீள, உயரத்தைப் பார்த்தாலே இது புரியும்.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை.

கருவறையில், விநாயகப் பெருமான் ஒரு பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்து காமரூபராக காட்சியளிக்கிறார். இதற்கு சில விளக்கங்கள் தருகிறார்கள். ஒரு பெண், குழந்தை பெற்று தாய்மையடைவதை பெருமையாகக் கருதுகிறாள்.

தாய்மைக்குப் பிறகு, அந்தக் குழந்தை நல்லவனாக, வல்லவனாக, பெற்றோருக்கு கீழ்ப்படிந்தவனாக நடக்க ஆசை கொள்கிறாள். விநாயகர், பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்திருப்பதை தரிசிப்பதன் மூலம், அசுர குணமுள்ள குழந்தைகள் பிறப்பது தடை செய்யப்படுகிறது என்பது நம்பிக்கை.

(சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலிலும் இத்தகைய அமைப்பில் ஒரு விநாயகர் சிலை இருக்கிறது). தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் விநாயகருக்கு இத்தகைய அமைப்பு இல்லை.

விநாயகரை அடுத்து நெல்லையப்பருக்கு சிறிய சன்னதி உள்ளது.
திருவிழா:- விநாயகர் சதுர்த்தி

இங்குள்ள இறைவனை வணங்கினால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

கோரிக்கை நிறைவேறியதும் விநாயகருக்கு திருமுழுக்காட்டு செய்து புத்தாடை அணிவித்து வழிபாடு செய்கிறார்கள்.

அருள்மிகு உச்சிஷ்ட கணபதி (பெரிய கணபதி) திருக்கோயில்,
புது பைபாஸ் ரோடு அருகே, திருநெல்வேலி 627 001.

காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.