Breaking News :

Thursday, November 21
.

ஊதுபத்தி ஏற்றுவது ஏன்?


ஊதுபத்தி ஏற்றுவது இறைவனை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் கூற நாம் கேட்டிருப்போம்,
அதனுள் மறைந்திருக்கும் உண்மையான பொருளை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஊதுபத்தியைக் ஏற்றி வைத்தவுடன் அதனிலிருந்து புறப்படும் தெய்வீக மணம் சுற்றுச் சூழலை சூழ்ந்து விடும் .

அது புகைந்து சாம்பலானாலும் தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது.

இது ஒரு தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு ஓர் உண்மையான இறைத் தொண்டன், தன்னுடைய சுயநல குணங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும், பிறருக்காக நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் வாழ்க்கையும் மணம் வீச வழி செய்வதே தெய்வீகச் செயலாகும், ஊதுபத்தி சாம்பலாகி விட்டாலும் அதன் மணம் மட்டும் காற்றில் கலந்து விடுகின்றது, அதன் மணத்தை முகர்ந்தவர் அதை தம் நினைவிலே வைத்திருப்பர்.

அது போலத்தான் மற்றவர்களுக்காக நன்மை செய்து விட்டு வாழ்ந்து மறைந்தவர்களின் பேரும் புகழும் என்றுமே மக்களிடையே நிலைத்திருக்கும்.

நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல விஷயங்களைக் கூறுவதும், நல்ல விஷயங்களை அவர்களுக்குச் செய்தலும், அவர்கள் எப்போதும் நல்வாழ்வு பெற வேண்டும் என மனதார நினைப்பதும் மிகப் பெரிய உன்னதமான செயலாகும்.

இதுபோன்ற குணத்தைதான் ஊதுபத்தி குறிக்கின்றது.
இது போன்ற குணத்தை உடையவர்கள்தான் இறைவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள், இதைதான் நம் பெரியவர்கள் அவ்வாறு கூறியுள்ளனர்.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
அறத்தை

(தருமம், புண்ணியம்) பெருக்கக் கூடிய நல்லனவற்றை (நல்ல சொற்கள், எண்ணங்கள், செயல்கள் என்று) மட்டும் பயக்கவற்றை பிறரிடம் நாடிச்சென்று இன்பம் பயக்கும் வண்ணம் இனிய நற்சொற்களைச் சொல்வார் என்றால் அவரிடம் உள்ள தீயவையும் பயனற்றவையும் பாவங்களையும் குறைந்து கொண்டே இருக்கும்.

அறத்தைப் பெருக்கும் இனியவற்றை நாடிச் சென்றுப் பேசினால் துன்பமெல்லாம் குறையும்.

அது நம்மை செம்மைப் படுத்திக் கொண்டே இருக்கும்.
அமைதி பிறக்கும் மனம் மகிழும்.

இதையே இன்று Positivity என்று எல்லோரும் கூறுகின்றனர்.
நல்லவற்றைச் சொன்னால் மட்டும் போதாது.

அதனை இனிய சொற்களில் சொல்வதும் அவசியம், ஏனெனில் நல்லவையானாலும் கடும் சொற்களால் சொன்னால் அது அறமாகாது.
மற்றவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல விஷயங்களைச் சொல்வதால் ஒருவருடைய தீவினைகள் தேய்ந்து நல்வினைகள் பெருகும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.