6-6-2024 வியாழக் கிழமை இன்று வைகாசி மாத அமாவாசை, ரோகினி நட்சத்திரத்தோடு சேர்ந்து வருகிறது. இந்த அமாவாசைக்கு உரிய சிறப்பை பற்றியும், பல பேர் அறியாத வைகாசி அமாவாசையில் நடக்கும் ரிஷப வாகன சேவையைப் பற்றிய அறிய தகவலையும் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பல பேருக்கு இந்த வைபவம் தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரிந்திருக்காது. தெரியாதவர்கள் இந்த தகவலை தெரிந்து கொண்டு ஈசனின் அருளை பெறலாம். வைகாசி அமாவாசை சிறப்பு பொதுவாகவே தை அமாவாசைக்கு மறுநாள் சீர்காழி பக்கத்தில் இருக்கும் திருநாங்கூர் என்ற ஊரில் 11 ஊர்களில் இருக்கும் பெருமாளும், 11 கருடனின் மீது அமர்ந்து, ஒரே இடத்தில் வந்து, திருமங்கை ஆழ்வாருக்கு தரிசனம் தரும் வைபவம் நடைபெறும்.
இதே போல வைகாசி மாதம் அமாவாசை அன்று, சீர்காழியை சுற்றி இருக்கும் 12 சிவா ஆலயங்களில் இருக்கும் சிவபெருமான், 12 ரிஷப வாகனத்தில், அதாவது நந்தியின் மீது அமர்ந்து வலம் வந்து, மதங்க மகரிஷிக்கு காட்சி தரும் வைபவம் நடைபெறுகிறது. 12 நந்தி பகவானின் வாகனம் இருக்கும். 12 ஊர்களில் இருந்து சிவபெருமான் அந்த நந்தி வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
மொத்தமாக 12 சிவபெருமானையும் ஒரே இடத்தில் காணக்கூடிய பாக்கியம் இந்த வைகாசி அமாவாசையில் திருநாங்கூருக்கு சென்றால் உங்களுக்கு கிடைக்கும். வாய்ப்பு உள்ளவர்கள் இன்றைய தினம் சீர்காழிக்கு சென்று இந்த திருவிழாவில்கலந்துகொள்ளலாம்.
உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் தீரும். நந்தி பகவானின் ஆசீர்வாதமும் சிவபெருமானின் ஆசீர்வாதமும் ஒரு சேர கிடைக்கும். 12 சிவாலயங்களில் இருக்கும் கடவுள்களும் மொத்தமாக அந்த இடத்தில் சங்கமிக்க போகும் நேரம் நேர்மறை ஆற்றல் நிறைந்ததாக இருக்கும் அல்லவா. அந்த காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
சரி, ஆனால் எல்லோராலும் அவ்வளவு தூரம் சென்று நந்திதேவரையும் சிவபெருமானையும் வழிபாடு செய்ய முடியாது. இருந்தாலும் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று, நந்தி பகவானை வழிபாடு செய்யுங்கள். உங்களால் இயன்ற பூ பழங்களை வாங்கிக் கொண்டு போய் கொடுத்து, நந்தி பகவானை தரிசனம் செய்யுங்கள்.
நந்தி பகவானிடம் உங்களுடைய வேண்டுதலை வைத்தால் அது நடக்கும் என்பது நம்பிக்கை. நந்தி பகவானை வழிபாடு செய்து விட்டு பின் ஈசனையும் சென்று தரிசனம் செய்யுங்கள். வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்குசென்றுபின் சொல்லக்கூடிய இந்த பாடலை படியுங்கள்.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி விலக அமாவாசை திதியில் செய்ய வேண்டிய பரிகாரம் நந்தி பகவானை வணங்கி சிவனது பாதங்களைச் சரணடைந்து, குடும்ப பிரச்சினைகள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள். உங்களுடைய சுமையை குறைக்க கூடிய வேலையை நந்தி பகவானும் சிவபெருமானும் பார்த்துக்கொள்வார்கள்.
இந்த வைகாசி அமாவாசை திதியில் எம்பெருமானை பற்றிய இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்ளதில் மன மகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.