சூரபத்மனை ஸ்ரீ முருகப்பெருமான் ஆட்கொண்ட திருத்தலம் மயிலம்.
ஸ்ரீ முருகப்பெருமானால் சூரபத்மன் தோற்கடித்த பின்னர், தனது செயலுக்காக வருந்திய சூரபத்மன் பாவ நிவர்த்தி தேடி வந்து கடுந்தவம் புரிந்த திருத்தலம் மயிலம்.
சூரபத்மனின் கடுந்தவத்தை மெச்சி, ஸ்ரீ முருகப்பெருமான் சூரபத்மனுக்கு அருட்காட்சி தந்த திருத்தலம் மயிலம்.
தனக்கு காட்சியளித்த ஸ்ரீ முருகப்பெருமானிடம் தன்னை தங்களின் வாகனமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று சூரபத்மன் வேண்டி கேட்டுக்கொண்ட திருத்தலம் மயிலம்.
மயில் வடிவ மலையாக இருந்து தான் தவம் புரிந்த மலைக்கு மயூராசலம் எனப் பெயர் விளங்க வேண்டும் என்று ஸ்ரீ முருகப்பெருமானை சூரபத்மன் வேண்டிக்கொண்ட திருத்தலம் மயிலம்.
இந்த மயிலம் மலையிலேயே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று ஸ்ரீ முருகப்பெருமானை சூரபத்மன் வேண்டிக்கொண்ட திருத்தலம் மயிலம்.
மயிலம் திருத்தலத்திலேயே வீற்றிருக்க வேண்டும் என்ற சூரபத்மனின் கோரிக்கைக்கு ஸ்ரீ முருகப்பெருமான், வருங்காலத்தில் இந்த மயூராசலத்திலே பாலசித்தர் என்ற சித்தர் தவம் புரிவார், அப்போது உனது எண்ணம் நிறைவேறும் என்று ஸ்ரீ முருகப்பெருமான், சூரபத்மனிடம் கூறி மறைந்த திருத்தலம் , மயிலம்.
பிற்காலத்தில், கயிலை மலையில் சிவபெருமானால் சபிக்கப்பட்ட சங்கு குணா, பால சித்தர் என்ற பெயரில் மயிலம் திருத்தலத்தில் தவமிருந்து, அம்பிகைக்கு காவலராய் நின்றபோது அங்கு வந்த ஸ்ரீ முருகப் பெருமானுடன் போர்புரிந்தபோது, வந்திருப்பது ஸ்ரீ முருகப்பெருமான் என்பதை அறிந்த பாலசித்தர், அவரை வணங்கி, தாங்கள் இத்திருத்தலத்தில் திருமணக் கோலத்தில் அருட்காட்சி அளிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டதற்கிணங்க, அவ்வாறே ஸ்ரீ முருகப்பெருமான் திருமணத் திருக்கோலத்தில் அருளும் திருத்தலம், மயிலம்.
பாலசித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ள திருத்தலம் மயிலம்.
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தில், ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானையுடன் ஸ்ரீ முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரியும் திருத்தலம், மயிலம்.
பெரும்பாலும் ஸ்ரீ முருகப்பெருமானின் மயில் வாகனம் நேராகவோ அல்லது தெற்கு நோக்கிதேயோ தான் அமைந்திருக்கும். ஆனால், மயிலம் திருத்தலத்தில் மட்டும் மயில் வாகனம் வடக்கு நோக்கி அமைந்திருப்பது இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பு.
இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பு, மயிலம் மலையில் அதிகமாக விளைந்திருக்கும் நொச்சிக் காட்டிலிருந்து நொச்சி இலைகளைக் கொண்டு தொடுக்கப் பட்ட நொச்சி இலை மாலையை காலையில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு முதலில் அணிவித்த பின்னதே மற்ற பூ மாலைகள்