Breaking News :

Thursday, November 21
.

பாவங்கள் போக்கும் வைகாசி மாதம்



🔯தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் வைகாசம் மாதம் என்றும், மாதவ மாதம் என்றும் போற்றப்படுகிறது.

🔯 இந்த மாதத்தில் சூரிய பகவான், மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் தனது பயணத்தை துவங்குவார். 

🔯இந்த மாதத்தில் கங்கை போன்ற புண்ணிய நதிகளில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் கூட நீங்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன,

🔯2023 ம் ஆண்டில் வைகாசி மாதமானது மே 15 ம் தேதி துவங்கி, ஜூன் 15 ம் தேதி வரை நீடிக்கிறது. 

🔯இந்த மாதத்தில் வரும் விசேஷ நாட்கள், முக்கிய விரத நாட்கள், சுபமுகூர்த்த நாட்கள் போன்ற முக்கிய விபரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

*🔯வைகாசி மாத விசேஷ, விரத நாட்கள் 

வைகாசி 01 (மே 15) திங்கட்கிழமை - ஏகாதசி

வைகாசி 03 (மே 17) புதன்கிழமை - பிரதோஷம்

வைகாசி 05 (மே 19) வெள்ளிக்கிழமை - அமாவாசை

வைகாசி 09 (மே 23) செவ்வாய்கிழமை - சதுர்த்தி

வைகாசி 11 (மே 25) வியாழக்கிழமை - வளர்பிறை சஷ்டி

வைகாசி 17 (மே 31) புதன்கிழமை - ஏகாதசி

வைகாசி 18 (ஜூன் 01) வியாழக்கிழமை - பிரதோஷம்

வைகாசி 19 (ஜூன் 02) வெள்ளிக்கிழமை - வைகாசி விசாகம்

வைகாசி 20 (ஜூன் 03) சனிக்கிழமை - பெளர்ணமி

வைகாசி 24 (ஜூன் 07) புதன்கிழமை - சங்கடஹர சதுர்த்தி

வைகாசி 25 (ஜூன் 08) வியாழக்கிழமை - திருவோணம்

வைகாசி 26 (ஜூன் 09) வெள்ளிக்கிழமை - தேய்பிறை சஷ்டி

வைகாசி 31 (ஜூன் 14) புதன்கிழமை - ஏகாதசி

வைகாசி 32 (ஜூன் 15) வியாழக்கிழமை - கிருத்திகை, பிரதோஷம்.

*🔯வைகாசி மாத சுபமுகூர்த்த நாட்கள் 

வைகாசி 08 (மே 22) - திங்கட்கிழமை (வளர்பிறை)

வைகாசி 10 (மே 24) - புதன்கிழமை (வளர்பிறை)

வைகாசி 11 (மே 25) - வியாழக்கிழமை (வளர்பிறை)

வைகாசி 18 (ஜூன் 01) - வியாழக்கிழமை (வளர்பிறை)

வைகாசி 22 (ஜூன் 05) - திங்கட்கிழமை

வைகாசி 24 (ஜூன் 07) - புதன்கிழமை

வைகாசி 25 (ஜூன் 08) - வியாழக்கிழமை

வைகாசி 26 (ஜூன் 09) - வெள்ளிக்கிழமை

*🔯வாஸ்து மற்றும் பூமி பூஜை நாள், நேரம் 

வைகாசி 21 (ஜூன் 04) ஞாயிற்றுக்கிழமை - காலை 09.58 முதல் 10.34 வரை

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.