ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 9 கி.மீ. தொலைவில் இருக்கும் வல்லக்கோட்டையில் வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்து இருக்கிறது.
இது 1200 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது.
தமிழகத்திலேயே இக்கோவிலில் இருக்கும் முருகன் 7 அடி முருகன் சிலை தான் மிகப்பெரிய முருகன் சிலை ஆகும்.
முருகப்பெருமானின் துணைவியரான வள்ளி மற்றும் தெய்வாணையின் சிலைகள் இருபுறமும் வைக்கப்பட்டு இருக்கின்றன.
துர்வாச முணிவரின் ஆலோசனையின்படி தன் ராஜ்யத்தை திரும்ப பெறுவதற்காக பகரீதன் இந்த கோவிலை கட்டியதாக புராணம் கூறுகிறது.
வல்லான் என்கிற அரக்கன் தேவர்களை சித்திரவதை செய்ததாகவும், முருகப்பெருமான் அவனை வீழ்த்தி இவ்விடத்தில் அமைதியை நிலைநாட்டியதாகவும், அவரை பெருமைபடுத்தும்படி இந்த கோவில் கட்டப்பட்டதாகவும் மற்றும் ஒரு புராணச் செய்தியும் கூறப்படுகிறது.
வஜ்ர தீர்த்தம் என்னும் தொட்டி இந்த கோவிலில் இருக்கிறது.
இது இந்திர தேவனுடைய வஜ்ராயுதத்தினால் உருவாக்கப்பட்டது என்றும் நம்பப்படுகின்றது.
சுப்ரமணிய ஸ்வாமியை வழிபடுவதற்காக இந்திரன் இந்த தொட்டியை பயன்படுத்தியதாகவும் கூறுகின்றனர்.
இக்கோவிலில் ஸ்ரீ விநாயகர்,
ஸ்ரீ அம்பாள், உத்சவா முருகர் மற்றும்
ஸ்ரீ சண்முகர் ஆகிய தெய்வங்களின் சன்னதிகளும் அமைந்திருக்கின்றன.
காமாக்ஷி மற்றும் ராமர் ஸ்ரீ ஆஞ்சனேயரை தழுவியபடி இருக்கும் சிற்பவேலைப்பாடுகளும் ஆர்த மண்டபத்தின் தூண்களில் உள்ளன.
தரிசன நேரம் காலை 5:30- மதியம் 1:00 மற்றும் மதியம் 3.00 - இரவு 8:30.
இவ்வூரில் கிடைக்கும் 'செங்கழுநீர் பூ' என்னும் மலரின் பெயரில் இருந்தே செங்கல்பட்டு என்கிற பெயர் உருவானதாக கூறப்படுகின்றது.
கொலவாய் ஏரியில் தமிழக அரசு சுற்றுலாத்துறை அமைத்துள்ள போட் ஹவுஸ் செங்கல்பட்டின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பு இடம் ஆகும்.
எனினும், தற்போது இந்த போட் ஹவுஸ் பயன்பாட்டில் இல்லை.
விஜயநகர மன்னர்கள் கட்டிய செங்கல்பட்டு கோட்டையும் செங்கல்பட்டில் இருக்கிறது.