வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புபெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளிக்கிறார். இந்த கோயிலில் அமைந்துள்ள குளத்திற்கு சரவண பொய்கை என்று பெயர். குளத்திற்கு அருகே வள்ளியின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. குளத்தை அடுத்து வரும் படிகட்டு களில் ஏறித்தான் முருகனை வழிபட முடியும்.
படிகட்டுகளின் பாதையில் ஆங்காங்கே மண்டபங்களும் அமைந்துள்ளது. அதில் 8 கால் மண்டபத்தை தவிர மற்றவைகள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்டன.
ஆனால் அந்த 8 கால் மண்டபம் மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வள்ளிமலைக் கோயிலை புதுப்பிக்கும் பணிகள் நடந்த போது, 8 கால் மண்டபப் பகுதியில் உள்ள ஒரு கல்லை அகற்றும்போது அங்கிருந்து வாசனை நிரம்பிய புகை வந்ததாகவும், அதற்குள் சித்தர்கள் தியான நிலையில் இருந்ததைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் அவ்விடத்தில் மட்டும் எந்தவித மாற்றமும் செய்யாமல் அந்த கல்லை அப்படியே மூடிவிட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும் மாற்றியமைக்கப்படவில்லை.
படிகளைக் கடந்து கோயிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோயில் நம்மை அதிசயிக்க வைக்கிறது.
நுழைவாயிலில் உள்ள ஒரு சந்நதியில் வள்ளி அம்மன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்திற்கும் ஆடைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெறுகின்றன. அவரை வணங்கிவிட்டு உள்ளே செல்லும் போது சாதாரண உயரம் கொண்டவர்களும் குணிந்துதான் செல்ல வேண்டும். அவ்வளவு தாழ்வான நுழைவாயிலை அடுத்து முருகன் கர்ப்பகிரகம் காட்சி அளிக்கிறது.
மேலே பார்த்தால் பாறை எங்கே நமது தலையில் விழுந்துவிடுமோ என்ற அச்சம் உருவாகிறது.
பாறைகளைக் குடைந்து அதற்குள் முருகனை வைத்து வழிபட வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியிருக்கும் என்று பிரம்மிப்பாக உள்ளது. எப்படித்தான் இந்த கோயிலை உருவாக்கியிருப் பார்கள் என்று நாம் பிரம்மித்து நிற்கும்