ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
விளக்கம்:
ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறை போலும் தந்தத்தையும் உடையவரும், சிவ பிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.
ஐந்து கரங்களில் வலப்புறக் கைகளில் ஒன்று பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாக காட்சி தருகிறது. மேல் வலப்புறக் கையில் அங்குசம் உள்ளது. இடப்புற மேல் கையில் பாச கயிறும், மற்றொரு இடக்கையில் மோதகமும் (கொழுக் க்ட்டை) வைத்தபடி விநாயகர்காட்சி தருகிறார். ஐந்தாவது கையான துதிக்கையில் அமுத கலசம் ஏந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
கொடியவர்களை ஒழிக்கும் ஆயுதமாக அங்கு சத்தையும், தம்மை வழிபடும் அடிய வர்களுக் குத் துன்பம் தருவோரை தமது பாசக்கயிற்றால் அழிக்கவே அதனை கை யில் ஏந்தியுள்ளார். மற்றொரு கையில் அவருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை யை வைத்துள்ளார். துதிக்கை யில் வைத்திருப்பது அமுதக் கலசம்.
அதாவது விநாயகரை மனமுருக வேண்டி வழி படுவோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவது ம் அமுதம் போன்ற திகட்டாத வாழ்வு கிடைக்கு ம் என்பதையே இது உணர்த்துகிறது.
ஶ்ரீ கஜமுக பாத நமஸ்தே...
விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி...
நேசமுடன் விஜயராகவன்....