Breaking News :

Thursday, November 21
.

உங்க நட்சத்திரத்திற்கு என்ன தொழில் செய்யலாம்?


இந்து சாஸ்திரத்தில் ஒரு குழந்தை பிறந்ததுமே பிறந்த நேரத்தை வைத்து கிரக அமைப்பின் படி ஜாதகம் கணிக்கப்படுகிறது. இந்த ஜாதகத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு ராசி அமைய பெற்றிருக்கும். அந்த ராசியின் படி எந்த நட்சத்திரம்? என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தொழில்கள்  உண்டு. அவற்றின் படி இக்குழந்தை வளர்ந்து வந்தாலும், படித்தாலும் நல்ல ஒரு எதிர்காலம் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கணித்துக் கூறுகிறது. அதன் அடிப்படையில் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ப உங்களுக்கு என்ன தொழில் செட் ஆகும்? என்பதை தான் இந்த ஜோதிடம் சார்ந்த குறிப்புகளின் மூலம் அறியலாம்

 

*அஸ்வினி:*

 

உடல் கல்வி ஆசிரியர், விளையாட்டு வீரர், விளையாட்டு பயிற்சியாளர், ஆலோசகர்கள், நீர் சுத்திகரிப்பு, வேதியல் துறை, மருத்துவ அறிவு பெற்றவர், ஓட்டுநர் பயிற்சியாளர், காவல்துறை, ராணுவ வீரர், ஸ்டண்ட், நடனம், கட்டிட தொழில், கான்கிரீட் தொழில், பொறியியல் துறை, இயந்திர மேலாளர்.

 

*பரணி:*

 

மேனேஜர், குழந்தைகள் பராமரிப்பு, மகப்பேறு மருத்துவர், பெண்கள் மருத்துவம், பதிவாளர், ஹோட்டல் துறை, இறைச்சி துறை, தேயிலை, கால்நடை, திரைத்துறை, இசைத்துறை, பொழுதுபோக்கு சாதனங்கள் விற்பனை, உர விற்பனை, நீதிபதி, பதப்படுத்துதல், உற்பத்தி செய்தல்.

 

*கார்த்திகை:*

 

கட்டுமான பொருள் விற்பனை, நெருப்பு சார்ந்த தொழில், தையல் தொழில், எம்ராய்டிங், ப்யூட்டிஷியன், மேக் அப் ஆர்டிஸ்ட், கூர்மையான ஆயுதங்கள் தயாரிப்பு, நகை விற்பனை, கண்ணாடி உற்பத்தி, ராணுவ ஜெனரல், மேனேஜர், விமர்சகர், பைனான்ஸ், வங்கி, பாத்திர வியாபாரம் அல்லது உற்பத்தி

 

*ரோகிணி:*

 

பைலட், கப்பற்படை, உணவு பதப்படுத்துதல் துறை, அறிவியல் ஆசிரியர், ஜவுளி கடை, பேஷன், பியூட்டிஷியன், பேக்கேஜிங், நிதி ஆலோசகர், பூ விற்பனையாளர், மீன் விற்பனையாளர், ஆடை வடிவமைப்பாளர், நடனம், இசை, பாடலாசிரியர், கவிஞர், டிரைவர், மந்திரி, கலெக்டர், கடல்வாழ் பொருட்கள்.

 

*மிருகசீரிடம்:*

 

ரியல் எஸ்டேட், பத்திரப்பதிவு, சிவில், நீதிபதி, மனோதத்துவ நிபுணர்கள், அழகு சாதன பொருட்கள் விற்பனை, சுற்றுலாத்துறை, ஜவுளி கடை, அசிஸ்டெண்ட், ஃபேஷன் டிசைனர், செல்லப்பிராணி விற்பனை, கதாசிரியர், மொழி ஆராய்ச்சியாளர், இசை கலைஞர், மென்பொருள் பொறியாளர்.

 

*திருவாதிரை:*

 

ஜோதிடம், உயிரியல், எழுத்தாளர், மண்டபம், நகைச்சுவை நடிகர், ஆயுத தொழிற்சாலை, நவீன உபகரணங்கள், காவல்துறை, ஜெராக்ஸ், அரசியல், வழக்கறிஞர், பர்னிச்சர் விற்பனை, போட்டோ ஸ்டூடியோ, மின் பொறியாளர், எலக்ட்ரீசியன், கணினி, பிளக்ஸ்.

 

*புனர்பூசம்:*

 

பொழுதுபோக்கு, நடிப்பு, வங்கி, கணிதம், ஆடம்பர பொருட்கள் விற்பனை, ஹோமியோபதி, ஹோட்டல், ஆசிரியர், ஏற்றுமதி இறக்குமதி, சிவில் இன்ஜினியர், ஆன்மீகம், கோவில் பணிகள், விண்வெளி வீரர், விமானி.

 

*பூசம்:*

 

கைவினை கலைஞர், குழந்தைகள் மருத்துவர், ஆசிரியர், அரசியல், உளவியலாளர், ரியல் எஸ்டேட், தொண்டு நிறுவனம், அரிசி, கோதுமை, பலசரக்கு, எண்ணெய், இரும்பு, பழைய பொருட்கள், பழைய வாகனங்கள், அறுவை சிகிச்சை, ஆன்மீகம், பாரம்பரிய மருத்துவம், கைவினை.

 

*ஆயில்யம்:*

 

மீனவத்துறை, விண்வெளி, கடல் ஆராய்ச்சி, கப்பல், தொழில்நுட்பம், அடகு கடை, சேவை மையம், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, மனநல மருத்துவர், யோகா, வக்கீல், சட்ட புத்தக விற்பனை, மெடிக்கல், மருந்து பொருள், தொழிற்சாலை, ஆயுர்வேதம், வணிகம்.

 

*மகம்:*

 

ராணுவம், ஜனாதிபதி, ஆன்மீக நூல்கள், நூல் பதிப்பகம், மின்னணு பொருட்கள், நடுவர், கிரிக்கெட், நீதிபதிகள், வர்த்தகம், வியாபாரம், பரம்பரை தொழில், வரலாற்று ஆசிரியர், நிர்வாகி, மேலாளர், ஜோதிடம், ராணுவம், தொல்பொருள் ஆராய்ச்சி, கால்பந்து.

 

*பூரம்:*

 

ஊடகத்துறை, நகை வியாபாரம், திரையரங்கம், நறுமணப் பொருட்கள் விற்பனை, கம்பளி விற்பனை, ரோஜாப்பூ, பருத்தி, பட்டு விற்பனை, சுற்றுலா தொழில், அழகு நிபுணர், சினிமா துறை, ஜவுளி துறை, பாத்ரூம் பொருட்கள் விற்பனை, செய்தி வாசிப்பவர், விவாதிப்பவர்.

 

*உத்திரம்:*

 

பால் உற்பத்தி, வியாபாரம், தானிய வியாபாரம், சமையல், ஊட்டச்சத்து, இதய நிபுணர், விமான பணிப்பெண், செவிலியர், சுகாதார பராமரிப்பாளர், கவுன்சிலர், ஹார்ட் சர்ஜன், பொழுதுபோக்கு, ஊடகம், மேனேஜர், அர்ச்சகர், மத போதகர், விலங்கு சார்ந்த தொழில்கள், சரணாலயம்.

 

*அஸ்தம்:*

 

ஆடிட்டிங், டீலர், பில்டர், கமிஷன் ஏஜென்ட், நோட்டு புத்தகம் விற்பனை, காகித தொழில், பதிப்பகம், அச்சிடுதல், பேக்கேஜிங், பொம்மை தயாரிப்பது, தச்சர், ஜோதிடர், கைரேகை நிபுணர், நகைச்சுவை நடிகர், வர்ணனையாளர், தட்டச்சு, கணக்காளர், பூங்கா பராமரிப்பு, கைவினை கலைஞர், மந்திரவாதி.

 

*சித்திரை:*

 

ஜவுளி, விவசாயம், ஆடை வடிவமைப்பு, சிற்பி, கட்டிடக்கலை, இயந்திர பாக உற்பத்தி, சிறை அதிகாரி, வழக்கறிஞர், ஓவியர், திரைக்கதை எழுத்தாளர், விளம்பர தொழில், நகை கடை தொழில், மார்க்கெட்டிங், கிராபிக்ஸ், வாஸ்து, சொற்பொழிவாளர், பொது மருத்துவர்.

 

*சுவாதி:*

 

வாகன விற்பனை, ஹோட்டல், பங்கு சந்தை, பலூன் உற்பத்தி, மல்யுத்தம், தொழில்நுட்ப வல்லுனர், விமானத்துறை, இசைத்துறை, ஒப்பந்தக்காரர், ஆசிரியர், வழக்கறிஞர், கோவில் விற்பனை, பல்புகள் விற்பனை, பேச்சு சார்ந்த தொழில், வர்த்தகம், வீட்டுப் பணி, திருமண தகவல் மையம்.

 

*விசாகம்:*.

 

காவல்துறை, கிரிமினல் வக்கீல், நடன கலை, இசை கலை, ஜவுளி உற்பத்தி, டிவி ரேடியோ சார்ந்த தொழில், வணிக சங்கங்கள், காப்பீடு வசூல், லோன் வசூல், பாலின மருத்துவம், அரசியல், வரி வசூல், வருமான வரித்துறை, காவல்துறை, வங்கி, வெளிநாட்டு வர்த்தகம், உளுந்து, எண்ணெய் விற்பனை.

 

*அனுஷம்:*

 

மேஜிசியன், ஜோதிடர், வெளிநாட்டுப் பணி, போட்டோகிராபர், வழக்கறிஞர், சுரங்க தொழில், இரவு பணியாளர், இயற்பியல் துறை, மருத்துவ துறை, உளவுத்துறை, தீயணைப்பு துறை, வங்கி துறை.

 

*கேட்டை:*

 

வணிகம், இசைத்துறை, காவல்துறை, ராணுவ துறை, அரசு துறை, பத்திரிக்கை துறை, நிகழ்ச்சி தொகுப்பு, தொழில் சங்கம், நடிகர், கிரிமினல் வழக்கறிஞர், அறுவை சிகிச்சை நிபுணர், கடற்படை, மனநல மருத்துவம், மேஜிசியன்.

 

*மூலம்:*

 

பேச்சாளர், எழுத்தாளர், ஆன்மீக ஆசிரியர், மதகுரு, மூலிகை வியாபாரம், பயிற்சியாளர், காய்கறி வியாபாரம், அமைச்சர், பல் மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர், விவசாயம், பழ வியாபாரம், மருந்து விற்பனை, கணிதம், இயற்பியல், கெமிக்கல் துறை.

 

*பூராடம்:*

 

மாலுமி, ஆசிரியர், ஆன்மீக பூஜை பொருட்கள் விற்பனை, உயரமான இடங்களில் பணி புரிதல், ஆயுத தொழில், பொழுதுபோக்கு தொழில், நீர் சார்ந்த தொழில், ஏற்றுமதி இறக்குமதி, விளையாட்டு ஆசிரியர், மீன்பிடி, கப்பல் தொழில், விமான போக்குவரத்து, விமானி, மாலுமி, எழுத்தாளர்.

 

*உத்திராடம்:*

 

பொருளாதார நிபுணர், வனத்துறை, நூலகர், விளையாட்டு துறை, பாதுகாப்பு பணி, உடற்பயிற்சி, நீதிபதி, ராணுவ துறை, கல்வித்துறை, ஊடகத்துறை, அரசு ஒப்பந்தம், கட்டுமானம், நிர்வாகம், சட்டமன்ற உறுப்பினர், மருத்துவர்.

 

*திருவோணம்:*

 

உணவுத்துறை, கப்பல் துறை, வாகன ஓட்டுநர், ஏற்றுமதி இறக்குமதி, நிர்வாகி, மேலாளர், ஐடி துறை, சங்கம், ஆலோசகர், பதிவு துறை, பேராசிரியர், மனநல மருத்துவர், கல்வெட்டு, ஆராய்ச்சி, இசை, ஓவியம், நாட்டியம், நடனம், செல்போன், கதை எழுதுபவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மொழி ஆராய்ச்சியாளர்கள், மீன் வளர்ப்பு, மீன் வியாபாரம், பால் வியாபாரம்.

 

*அவிட்டம்:*

 

இசைத்துறை, நடனத்துறை, ராணுவ துறை, இரும்பு வியாபாரம், ரத்தினக்கல் வியாபாரம், விளையாட்டு வீரர், ரியல் எஸ்டேட், மருத்துவர், சமையல்காரர், யோகா ஆசிரியர், வாகன ஓட்டுனர், டீக்கடை, ஹோட்டல், காவல் துறை, கறிக்கடை, கால்நடை வளர்ப்பு, கோழி ஆடு வளர்ப்பு, மருந்தகம்.

 

*சதயம்:*

 

வெளிநாட்டு தொழில், பெட்ரோல் வியாபாரம், ஆட்டோமொபைல், போட்டோகிராபர், அழகு கலை நிபுணர், ஜிம், தற்காப்பு கலை, சினிமா துறை, தொலைக்காட்சி துறை, விமானி, செல்போன், கம்ப்யூட்டர், சேவை மையம், எக்ஸ்ரே, மின்சாரத்துறை, எலக்ட்ரீசியன், மின்னணு பொருட்கள் விற்பனை.

 

*பூரட்டாதி:*

 

பேங்கிங், ஆடிட்டிங், நகை தொழில், ஆசிரியர், மருத்துவ பயிற்சி, காவல்துறை, பத்திரிக்கை துறை, அரசு கருவூலம், அறநிலையத்துறை, ராணுவ துறை, பூ வியாபாரம், ஆன்மீக பொருட்கள் விற்பனை, வீடு வாடகை, நில விற்பனை, காவலர், வெப்பம் சார்ந்த தொழில், துணை ராணுவ பணி, வாகன தொழில்.

 

*உத்திரட்டாதி:*

 

காவலர், மீன் வளர்ப்பு, கரும்பு வியாபாரம், மாடு வளர்ப்பு, பால் வியாபாரம், பல சரக்கு, சினிமா, காலணி விற்பனை, மருத்துவம், நீதி, வக்கீல், வெளிநாடு, காய்கறி விற்பனை, வரலாற்று ஆசிரியர், துப்புரவாளர், அரசு ஒப்பந்ததாரர், விதை விற்பனை, எண்ணெய் விற்பனை, காய்கறி விற்பனை, வரலாற்று ஆசிரியர்.

 

*ரேவதி:*

 

வேளாண் உற்பத்தி, கணினி துறை, ரயில்வே, ஆடிட்டிங், மார்க்கெட்டிங், போக்குவரத்து, ஓட்டுனர், உணவு பொருள் விற்பனை, வணிகம், காவலர், காலண்டர் விற்பனை, ஜோதிடம், வெளிநாடு தொழில், நகைச்சுவை கலைஞர், நடிகர், இசைக் கலைஞர், ஓவியர், ஆலோசகர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.