Breaking News :

Thursday, November 21
.

செவ்வாய்கிழமையில் செய்யகூடாதவை?


செவ்வாய் கிழமையில் முடி வெட்டவோ, நகம் வெட்டவோ கூடாது என்று நம் வீட்டில் சொல்லக் கேட்டிருப்பீர்கள். செல்வம் போகும், துரதிஷ்டம் , நோய் கூடும் என சொல்லப்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்று நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதனை கடைபிடிப்பார்கள். ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தை இங்கே சொல்லப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

துர்கை மற்றும் லட்சுமி தினம் இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக சொல்கிறோம்.

செலவு கூடாது
செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்குரிய நாளான செவ்வாயில் யாருக்கும் கடனாகவோ, வேறெதற்காகவோ பணம் கொடுக்க விரும்ப மாட்டார்கள். மகாலட்சுமி நம்மை விட்டு போய்விடுவாள் என்ற நம்பிக்கை உண்டு. அதே சமயம் பண வரவை எதிர்பார்ப்பார்கள்.

வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள்
எப்படி முடி வெட்டவோ, சவரம் செய்ய மற்றும் நகம் வெட்ட மாட்டார்களோ, அதே போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்தால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை.

ஆயுள் குறைவு :-

செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, நகம் வெட்டுவது சவரம் சசெய்வதால் துரதிர்ஷ்டத்தை வழங்குவதொடடு.ஜோதிடத்தின் படி…இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக சொல்லப்படுகிறது.

ரத்த சம்பந்த நோய்கள்:-

மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடுமாம்.

செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்
முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாக நேரிடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்களாம்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.