வாழ்க்கை குறிப்பு
இயற்பெயர் – சுப்பிரமணியம்
பிறந்த ஊர் – எட்டயபுரம்
பெற்றோர் – சின்னசாமி ஐயர் – இலக்குமி அம்மாள்
மனைவி – செல்லம்மாள்
வாழ்ந்த காலம் – 11.12.1882 முதல் 11.09.1921 வரை (39 ஆண்டுகள்) அமரகவி,
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். மக்கள் அன்புடன் இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11, 1882-இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887-ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரின் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
பாரதியார், இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்/ எல்லாரும் இந்தியா மக்கள்/ எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்ற சமத்துவக் குரலை இந்தியாவிலேயே அநேகமாக முதலில் எழுப்பியவர் பாரதியார் மட்டுமே. அதுமட்டுமன்றி ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சத்திய ஆவேசத்துடன் பாடியவர் பாரதியார். ‘இடம்பெரிது உண்டு வையத்தில் – இதில்/ ஏதுக்குச் சண்டைகள் செய்வீர் என்றார் பாரதியார்.
இவரைப் போல ஒரு புரட்சிக் கவிஞன் பிறப்பதும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை.
வருங்கால குழந்தைகளுக்கு எடுத்துரைப்போம்.
ஸ்ரீ அய்யனார் சுவாமி திருக்கோவில்
ஸ்ரீ அய்யனார் கோவில் மடாலயம் ®
ஸ்ரீ அய்யனார் ஞானயோக பீடம் ®
ஸ்ரீ அய்யனார் சுவாமி பக்த சேவா ®
ஸ்ரீ முத்துமாரியம்மாள் நித்ய அன்னதான சேவா ®
ஸ்தாபகர்: ஓம் ஸ்ரீ மாரியப்பசுவாமிகள்
ஸ்ரீ அய்யனார் ஆதீனம்
குருமகா சன்னிதானம் தவத்திரு ஹரிஹர சிவஸ்ரீ ஸ்ரீனிவாசசுவாமிகள்
கோயம்புத்தூர்
#தமிழ்நாடு
#பாரதியார்