Breaking News :

Thursday, November 14
.

பெண் பாவம் பொல்லாதது?


ஒரு பெண் மரண படுக்கையில் தனது கணவனிடம் "நான் இறந்தப்பிறகு என் கல்லறையின் ஈரம் காயும்வரை நீங்கள் இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது!" என்று, சத்தியம் கேட்கிறாள்... குழப்பத்திலேயே மனைவி கேட்ட அந்த சத்தியத்தை கொடுத்துவிடுகிறான் கணவன்.

ஓரிரு நாட்களிலே அவன் மனைவி நோய்வாய்பட்டு இறந்துவிடுகிறாள், கண்ணீரோடு தனது மனைவிக்கு செய்யவேண்டிய சடங்கு காரியங்களை முடித்து அவளை புதைத்த இடத்தில் ஒரு அழகிய சிமெண்ட் கல்லறை கட்டுகிறான்.

மாதங்கள் பல சென்றது, பெற்றோர்களும் நண்பர்களும் அவனை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினர், அப்போதுதான் அவனுக்கு தன் மனைவிக்கு கொடுத்த சத்தியம் ஞாபகத்திற்கு வந்தது... மனைவி இறந்த ஆறு மாதத்திற்கு பிறகு அவள் கல்லறையை காண சென்றான்.

கல்லறையை கண்டவன் அதிர்ச்சியில் முகமெல்லாம் வேர்த்து கொட்டியது, சுடுகாட்டில் பிணம் எறிக்கும் வாடையும், காற்றில் லேசாக அசையும் மரங்களையும் கண்டு "என்ன இது அதிசயம் ஆறு மாதமாகியும் என் மனைவியின் கல்லறை மட்டும் இன்னும் காயவில்லையே ஏதோ நேற்றைக்கு கட்டியது போல ஈரமாக அப்படியே இருக்கிறதே!" என புலம்பி பயத்தில் அங்கிருந்து வீட்டிற்கு ஓடிவிட்டான்.

ஒரு வருடம் முடிந்த நிலையில் தன் மனைவியின் நினைவு நாளன்று பூ புடவை எல்லாம் வாங்கிக்கொண்டு தைரியத்தை வரவழைத்து கொண்டு மறுபடியும் சுடுகாட்டிற்கு சென்றான், அப்போது ஒரு வருடமாகியும் அவன் மனைவியின் கல்லறை இன்னும் ஈரமாக இருப்பதை கண்டு அப்படியே மண்டியிட்டு கல்லறையை கட்டி அனைத்து தன் மனைவியின் பெயரை சொல்லி கண்ணீர் விட்டு கதறி அழுகிறான்.

அப்போது அவனுடைய மச்சான் (மனைவியின் சகோதரன்) ஒரு குடம் தண்ணீரோடு கல்லறையை நோக்கி வருகிறான். குழப்பத்துடன் "நீ இங்கு என்ன செய்கிறாய்! எதற்காக குடத்தில் தண்ணீர்! எதுக்குடா குடத்தில் தண்ணி...! என்று திரும்ப திரும்ப கேட்க...

"எனது சகோதரி அதாவது உனது மனைவி அவள் இறக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு "அண்ணா தினமும் காலையிலும் மாலையிலும் எனது கல்லறைக்கு தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடுங்கண்ணா!" என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டாளப்பா! என்று சொல்லி இன்னும் சத்தமாக அவனும் அழுகிறான். ((சில) பெண்களின் சதி ஆண்களின் முன் கோபத்தை விட கொடுமையானது. அதனால்தான் பெண் பாவம் பொல்லாதது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.