பூஜை அறை எங்கு எப்படி இருக்க வேண்டும்?

By News Room

1. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு  அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்கவேண்டும்.  கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும். 2. பூஜையறையை படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது. 3. பூஜையறையை பேஸ்மெண்டில் அமைக்கக்கூடாது. 4. பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஸ்டோர் ரூம் போல  வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது. 5. பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ , கீழோ டாய்லெட்டுகள் இருக்கக்கூடாது. 6. இறந்தவர்களின் ஃபோட்டோக்களை பூஜையறையில் வைக்கவேண்டாம். 7. ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும்,  வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது  வாஸ்துப்படி சிறப்பானது. 8. அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்துப் பூஜிக்கலாம். 9. பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம். 10, பூஜையறைச் சுவரை ஒட்டினாற்போல், சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது. சுவற்றில் மாடமிட்டும் வைக்கக்கூடாது.   சுவற்றை விட்டு சற்றுத் தள்ளி வைக்கவேண்டும்.

.
மேலும்