Breaking News :

Sunday, February 23
.

பாரதியார் வாழ்க்கை வரலாறு


ஆசிரியர் சுகீஸ்வரன்

கவிஞர் என்றாலே வறுமையும் கூடத் தொடருமாம்.தற்காலத் தமிழ் இலக்கியத்தின் விடி வெள்ளி என போற்றப்படுவர் பாரதி.அவர் ஒரு சிறந்த கவிஞர்.பாடகர்.எழுத்தாளர்.இதழாசிரியர்.விடுதலைப் போராட்ட தீரர்.பத்திரிக்கையாளர்.சமூக சீர்திருத்தவாதி.அடிமைப் பட்ட பாரதத்தை தன் கனல் பொங்கும் பாடல்களால் தட்டி  எழுப்பியவர்.    தேசிய கவி எனப் போற்றப்பட்டவர்.இவரின் கண்ணன் பாட்டு,குயில் பாட்டு,பாஞ்சாலி சபதம் சிறப்பு மிக்கவை.

எட்டயபுரத்தில் சின்னசாமிஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் டிசம்பர் 11ம் தேதி 1882ம் ஆண்டு பிறந்தார்.மறைவு செப்டம்பர் 11. 1921இளம் வயதிலே மரணம் தழுவி விட்டது,யானையின் ரூபத்தில்.தமிழ் கவிதை,உரைநடை சிறப்பான புலமை பெற்றிருந்தார்.நவீனத் தமிழ் கவிதைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்தமிழ்,தமிழர் நலன்,இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதிமறுப்பு, சமயங்கள் குறித்து இவருடைய கவிதைத் திறனை மெச்சி கலைமகள் எனும் பொருள் பட,எட்டைய புற நாய்க்கர் பாரதி என்ற பட்டம் வழங்கினார் இவருடைய நூல்கள் 1949ல் நாட்டுடைமையாக்கப்பட்டது.

சிறுவயதில் எட்டய புரத்தில் கல்வி பயின்றார்.பின் திருநெல்வேலியில்இந்து உயர்நிலைப்பள்ளியில்10ம் வ குப்பு வரை  படித்தார்.1897ல் கடையத்தைச் சேர்ந்த செல்லம்மாளை வாழ்க்கைத்துணையாக ஏற்றார்.தந்தை மரணத்துக்குப் பின் அரண்மனையில் வேலை.அங்கிருந்து காசிஇந்து கலாசாலையில்பயின்றார்.இந்தி,ஆங்கிலம் நல்ல தேர்ச்சிப் பெற்றார்.காசிக்கு வந்த மன்னர் வெங்கடேஷ்வர எட்டப்பன் திரும்பவும் பாரதியை எட்டயபுரம் அழைத்துச் சென்றார்.எட்டயபுரம் சமஸ்தானத்தில் மீண்டும் வேலை.மன்னருக்கு இலக்கியம்,காவியம்,சித்தாந்தம் பற்றி ப் பேசி மன்னரை மகிழ்வித்தார்.சுதேச மித்திரன் பத்திரிக்கையால் அவருக்கு பேரும் புகழும் கிடைத்தது.விடுதலைப் போராட்டத்தில் திலகர் அணியில் பங்கேற்றனர்.நிவேதிதா சுவாமி விவேகானந்தா சிஷ்யை.அவரின் கொள்கைகளை ஏற்றார் பாரதி.அவரது பேச்சால்,கவிதையால்,கட்டுரை,கதைகளால் மக்கள் வீறுகொண்டு எழுந்தபோது,பிரிட்டிஷ் அரசு அவரைக் கைது செய்ய முயன்றது.கப்பலில் தப்பி புதுச்சேரி சென்று அடைக்கலமானார்.இரண்டு பெண் குழந்தைகள்.மூத்தவள் தங்கம்மாள்,இளையவள் சகுந்தலா.

பாரதியின் வறுமை மிகக் கொடுமை.ஆயினும் தக்க சமயத்தில் யாராவது உதவி செய்து விடுவார்கள்.வாடகை கொடுக்க முடியாத நிலை.பசிக் கொடுமை வேறு.வீட்டு ஓனர் சபாபதி வந்து எப்ப வேணா கொடுங்க உங்களுக்கு உதவுவதை பெருமையாகக் கருதுகிறேன் எனக் கூறி மளிகைச் சாமான்,கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து உதவினார்.

அடுத்து கை ரிக்ஷாக்காரனுக்கு 1ரூபா கொடுத்து அவன் பசியைப் போக்கினார்.இன்று பாரதியை கிருஷ்ணசாமி செட்டியார் வீட்டிற்குஅழைத்துச் சென்று முறுக்கும் அதிரசமும் சாப்பிட்டு விட்டு,ரிக்ஷாகாரனுக்கும் கொடுக்கச் தம் வீட்டிற்கு பலகாரமும் சாப்பாடும் ரிக்ஷாவில் அனுப்பி வைத்தார் செட்டியார்.வயிரார உண்டு பசி தீர்த்தனர்.

நண்பர்கள் வவேசு ஐயர்,அரவிந்தருடன்.கூட.
  புதுச்சேரியில் கனகசுப்பிரமணியம்,பாரதி மீதுள்ள தீராக்காதலில் பாரதிதாசன் என்று பெயர் மாற்றம் செய்து பல கவிதைகளை வெளியிட்டார்.குடும்ப விளக்கு தலை சிறந்த காவியம்.

சிறையில் இருந்த சுப்பிரமணிய சிவாவுக்கு தொழுநோய் காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.அவரைக்கண்டு பாரதி கதறி அழுதார்.இந்திய தேசபக்தர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி அவர்களை சிறை பிடிக்க உத்தரவு இட்டது பி.ரிட்டிஷ் அரசு.புதுச்சேரியிலே தங்க வேண்டுமானால் 5மாஜிஸ்ரேட்டிடம் கையெழுத்து வாங்கித் தரவேண்டும்.சங்கர செட்டியார் தான் பொறுப்பேற்று வாங்கி காவல் துறையிடம் கொடுத்தார்.பாரதியும் நண்பர்களும் தப்பினர்.செட்டியார் அதோடு நிற்கவில்லை.பாரதியின் புத்தகம் வெளியிட உதவி செய்தார்.அரிசி,மளிகைச் சாமான் வாங்கிக் கொடுத்தார்.வஉசி,சிவா,பாரதி மூவரும் புதுச்சேரியில் சந்தித்து மனக்குமுறலை கொட்டிக் கொண்டதும் மீண்டும் சந்தித்ததில் பெருமகிழ்வு கொண்டனர்.சிவா ஆரம்பித்த பத்திரிக்கையில் கதையும் கவிதையும் எழுதினார் பாரதி.

ஜாதிகள் இல்லையடி பாப்பா எனக் காட்ட ஒரு ஹரிஜன பையனுக்கு பூணூல் போட்டு ஒரு வேதியரை பூணூலை அவிழ்க்கும் படியும் கூறி தானும் இனி அணிவதில்லை என்று வைராக்கியம் கொண்டார்.

 வறுமை திரும்பவும் பாரதியை ஆட்கொண்டது.சகுந்தலாவின் முகம் வாடி விட்டது பசியால்.மனம் நொந்த பாரதி உங்களுக்கு சொத்து எதுவும் சேர்க்கவில்லை.ஆனால் இப்பெட்டியில் இருக்கும்கையெழுத்துப் பிரதிகள் மகா சொத்து.உலகம் பூரா புகழும் காலம் வரும்.என்றவருக்கு நீங்களே எங்களுக்கு பெரிய சொத்து என்றாள் மகள்.அதே சமயம் சுந்தரேச ஐயர் பாரதி வீட்டில் அடுப்பு எரியவில்லை எனபலகாரம்,பழம்,மளிகைச்  சாமான் வாங்கி வந்தார்.

இதில் என்ன விஷேசம் என்றால் தன் வறுமையிலும் விருந்தோம்பலை நிறுத்தவில்லை.அவர் வணங்கும் பராசக்தி,கண்ணன்,சர்வேசன் எப்படியும் தன்னைக் காப்பார் என்றார்.

   தென்னாப்பிரிக்காவில் உள்ள நேடால் தமிழ் சங்கத்திற்கு உதவ பாரதி ஆசைப்பட்டார்.பொருளாதார நிலைமை,வறுமை இடம் தரவில்லை.தன் புத்தக விற்பனையில் பணம் அனுப்பினார்.நெல்லையப்பர் உதவினார்.நீண்ட காலம் ஆனதால்1918ல் புதுச்சேரியில் இருந்து வெளிவந்து கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.செல்லம்மாள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் செல்ல அன்போடும் பாசத்தோடும் வரவேற்கப்பட்டனர்.

தாகூரின் 5 கட்டுரைகள் ஜீவ வாக்கு என்ற பெயரில் வெளியிடப்பட்டது.இஸ்லாம்,இந்து மத சொற்பொழிவாற்றினார்.
     சென்னையில் காந்தியை தன் சொற்பொழிவுக்கு அழைத்தார் பாரதி.காந்திக்கு அன்று வேறு Programme இருந்ததால் வர இயலவில்லை.உங்கள் கொள்கைகளை ஏற்கிறேன் எனக் கூறி விடைபெற்றார் பாரதி.

  திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில்மத யானையால் தூக்கி எறியப்பட்டு தன் முடிவைத் தேடிக் கொண்டார்.
ரஷ்ய நாட்டுக் கவிஞன் புஷ்கின் போல 42வயதில் காலமானார்.பாரதியின் தம்பி விஸ்வநாத ஐயர் பாரதிபிரசுராலயம் நிறுவி கட்டுரை,கவிதை பிரசுரம் செய்ததில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை.அரசாங்கம் தடை விதித்தது.2000புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை அரசாங்க மேலவையில் பேசும் போது சத்தியமூர்த்தி உணர்ச்சிப் பொங்க பாரதி நாவில்  கலைவாணி தேச பக்தி நடனம் ஆடினாள்.வேறு எந்த தேசத்தில் அவர் பிறந்திருந்தாலும் அந்நாட்டின் ஆஸ்தான கவிஞர் பதவி பெற்றிருப்பார்.அவருக்கு பட்டங்களும் விருதுகளும் அளித்து கௌரவித்து இருக்கும்.தேசத்தலைவராக இருந்து மறைந்திருப்பர் என்றார்.

நமது வேதங்கள் வாழையடி வாழையாகஞாபக சக்தி மூலம் பல ஆயிரம். ஆண்டுகளாக காப்பாற்றப்பட்டு வருகிறது.மில்டனின் மீண்ட சொர்க்கம் மகாகாவியத்தை மனப்பாடமாக ஒப்பிவிப்பார்.அதே போல் தமிழில் ஒருவர் இருந்தால் போதும் பாரதியின் நினைவுகளை மீட்டெடுக்க.சு.நெல்லையப்பர்,பத்மநாபன் முயற்சியால் சக்தி காரியாலயம் கீழ் கண்டவாறு அவர் படைப்பைப் பிரித்து வழங்கினர்.முதல் பாகம் தேசிய கீதங்கள்,2ம் பாகம் தெய்வப் பாடல்கள்,3ம்வகை பல்வகைப்பாடல்கள் 4ம் பாகம் முப்பெரும் பாடல்கள்.

சிறு பாடலாக இருந்தாலும்உன்னதமான கருத்து புதைந்திருக்கும்.அதில்.
அக்னி குஞ்சொன்று கண்டேன்--அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோகண்ணன் பாட்டு பல தனி சிறுபாடல்கள் உள்ளடங்கிய கொத்து.கவிதை மூலம் கோவையாகக் கதைகூறும்  திறமையும் குருகோவிந்தர்,சுயசரிதை,பாரதி அறுபத்தாறு,குயில் பாட்டு மூலம் வெளிப்படுத்துகிறார்.. தேசிய கவியாக
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ--என்றும்
ஆரமுதுண்ணுதற்காசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவரோ.நம் உள்ளத்திலும் சுதந்திர வேட்கை எழுகிறது.கண்ணன் பாட்டில் வாடிய இதயம் ஒரு கனவுக் காட்சியில் கண்ணனைக் காணவும் மழை கண்ட பயிர் போல் உயிர்த்தெழுகின்றது.

எண்ணும் பொழுதிலெல்லாம்--அவன் கை
இட்ட விடத்தினிலே
தண்ணெறிருந்ததடீ--புதிதோர்
சாந்தி பிறந்ததடீ.பாஞ்சாலி சபதம்,குயில் பாட்டு,நாவல்களும் சிறுகதைகளும்,நீதியும் தத்துவ ஞானமும்(ஞான ரதம்)ஆங்கில வசனமும் கவிதையும்,கடற்கரைப் பாடல்கள்,அவரின் சிறப்புகள்.திலகர் மீது பெருமதிப்பு,விவிலிய நூலில் தேர்ந்த அறிவு பெற்றவர்,கவிக்குயில் சரோஜினியுடன் நட்பு,வீட்டை காவல் காத்த அம்மாக்கண்ணு மீது பாடல்.அவர் பாடாத சப்ஜெக்ட் எதுவுமே இல்லை என.லாம்.சிந்து நதிக்கோர் பாலம்,மேலைக் கடல்மீது கப்பல் விடுவோம்.

என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்
என்று மடியும் இந்த அடிமையின் மோகம்.சிறப்பு வரிகள்.

   1921ல்ஈரோட்டை அடுத்த கருங்கல்பாளையத்தில் மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பு.மறு நாள் ஒரு பொதுக் கூட்டத்தில் இந்தியாவின் எதிர்கால நிலை என்பது பற்றிப் பேசினார்.இதுவே இறுதி சொற்பொழிவாகும்.
   பாரதியை என்றும் போற்றி வணங்கிடுவோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.