உழைப்பில் பெறும் பணத்திற்கு
மதிப்பு அதிகம்...
சுய சம்பாத்தியத்தில்
வாங்கும் பொருளுக்கு
மதிப்பு அதிகம்...
மற்றவர்கள் வியக்கும் அளவிற்கு
வசதிகளுடன் கட்டிய வீட்டிற்கு
மதிப்பு அதிகம்...
கடின உழைப்பின் வழியில்
பெறும் பதவிக்கு
மதிப்பு அதிகம்...
உறவினர் சூழ்ந்திருக்கும் இடத்தில்
வாழும் வாழ்க்கைக்கு
மதிப்பு அதிகம்...
நீண்ட நாள் முயற்சிக்குப் பின்
சம்மதம் பெறும் காதலுக்கு மதிப்பு அதிகம்...
சம்மதம் பெற்றும்
கை சேராத காதலுக்கு
மதிப்பு அதிகம்.
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
- நாஞ்சில் கவிவளன்