Breaking News :

Saturday, December 21
.

வெனிஸ் நகரத்து வியாபாரி ஷேக்ஸ்பியர்.


தமிழாக்கம் ஊடுருவி நிலவொளி. தையல் வெளியீடு முதல் பதிப்பு 2005. மொத்த பக்கங்கள் 120 .விலை ரூபாய் 45.

இது ஒரு உலக இலக்கிய காவியம் என்று சொல்லலாம்.

ஷேக்ஸ்பியர் வரலாறு சற்று பார்த்துவிட்டு கதையை பார்ப்போம்.

மகாகவி சேக்ஸ்பியர் வாழ்க்கைக் குறிப்பு:

மனித குலம் இதுவரை கண்டுள்ள மகாகவிகளில், ஈடு இணையற்ற மேதைமை படைத்துள்ள சேக்ஸ்பியரின் இளமைப் பருவம், மிகச் சாதாரணமானது! கல்வியோ மிக மிகக் குறைவானது!

இங்கிலாந்தின் ஸ்டிராபோர்டு ஊரில் 1564 ல் ஜான் சேக்ஸ்பியருக்கும், மேரி ஆர்டனுக்கும் மகனாகப் பிறந்தார் வில்லியம் சேக்ஸ்பியர்.

தாய் மேரி, பிரபு குடும்பத்துப் பெண். தந்தை ஜான், ஊரில் பெரிய விவசாயி. அத்துடன் ஆட்டுக் கம்பளம், மரம், இறைச்சி வணிகமும் நடத்தி வந்தார். குடும்பம் வசதியாக இருந்தது. ஊரில் நல்ல மரியாதை இருந்தது. கௌரவ நீதிபதியாகவும் பணியாற்றினார். அவருடைய பல காரியங்களிலும் உடனிருந்து அனுபவம் பெற்றார் இளம் சேக்ஸ்பியர்.

படிப்பில் மிகச் சாதாரண மாணவனாகவே இருந்தார். "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்ற பழமொழி பொய்யாயிற்று. ஆனால், விளையாட்டில்ஈடுபாடு இருந்தது. ஊர்ப்பொது விளையாட்டுகளில் பங்கு கொண்டு பரிசுகளும் பெற்ற அவரின் பள்ளிப்படிப்பு பன்னிரண்டாம் வயதிலேயே நின்று போனது! “அரைகுறை இலத்தீனும், அற்ப கிரீக்கும்தான்” அவரது அயல்மொழிப் புலமை!

திடீரென அவர் தந்தை நொடித்துப் போனார். சொத்து சுகங்களை இழந்து,பதவிகளை இழந்து ,கடனாளியானார்.

அவரது பத்தொன்பதாம் வயதில், எட்டு வயது மூத்த ஆனி ஹத்தாவே என்ற பெண்ணைத் திருமணம் நேர்ந்தது.

மனநிறைவில்லாத திருமணம், வறுமைச் சூழல், அரைகுறைக்கல்வி, மகனின் மரணம் எல்லாம் சேர்ந்து சேக்ஸ்பியரை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தன.

ஒரு நாடகக் குழு ஸ்டிராபோர்டு வந்து நாடகம் நடத்திக்கொண்டிருந்தது.

அது, ஊரைவிட்டுப் போகும்போது அந்தக் குழுவுடன் சேர்ந்துகொண்டு ஊரைவிட்டு ஓடிப்போனார் சேக்ஸ்பியர்.

சேக்ஸ்பியர் லண்டன் மாநகருக்கு வந்து சேர்ந்தார். இருபத்தி ஏழாம் வயதில் அந்த மாநகரம் அவரை ஒரு எடுபிடி நாடகக்காரனாக ஏற்றுக்கொண்டு, ஒரு மகாகவியாக உருவாக்கி உலகிற்குத் தந்தது.

சேக்ஸ்பியர் பிறந்த காலத்தில், இங்கிலாந்தில் ஒரு நாடக அரங்குகூடக் கிடையாது. அப்போது இருந்தவையெல்லாம் நாடோடி நாடகக் குழுக்களே அவர்கள் ஊர் ஊராகச் சென்று பிரபுக்களின் மாளிகை முற்றங்களிலோ, பொது இடங்களில் திறந்தவெளி மேடை அமைத்தோதான் நாடகங்கள் நடத்தி வந்தார்கள்.

சேக்ஸ்பியர் லண்டன் வந்த காலத்தில் உலகப் புகழ் பெற்ற "குளோப் தியேட்டர்” உருவாகிவிட்டிருந்தது.

ஆரம்பத்தில் அவர் நாடக ஆசிரியராக இல்லை. நாடக அரங்கின் வாயிற் காவலனாகவும், நாடகம் காண வரும் சீமான்களின் கோச்சு வண்டி, குதிரைகளைப் பார்த்துக் கொள்கின்றவனாகவும், பிறகு அரங்கிற்குள் எடுபிடியாகவும் வேலை பார்த்தார்! அதற்குப் பிறகுதான் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது! தொடர்ந்து நடித்துத் திறமை காட்டியதில் சில நல்ல பாத்திரங்களும் ஏற்று நடிக்கும் வாய்ப்புப் பெற்றார்.

நல்ல நாடகங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை அப்போதுதான் சேக்ஸ்பியருக்கு ஏற்பட்டது.
 
சேக்ஸ்பியரின் முதல் காவியம், "வீனஸ் அண்ட் அடோனிஸ்" 1593-ல் வெளியானது. சௌதாம்டன் பிரபுவுக்குக் காணிக்கை யாக்கப்பட்டிருந்த இந்தக் காவியம் உடனடியாகப் பெரும்புகழைத் தேடித்தந்தது.

நாடக அரங்கின் எடுபிடி வேலையாளிலிருந்து மூன்றே ஆண்டுகளில் ஒரு நாடக மேதை பரிணமித்தது ஓர் அதிசயம்தான்.

தொடர்ந்து இருபது ஆண்டுகளில் 37 நாடகங்களையும், இரண்டு சிறு காவியங்களையும், சில தனிக் கவிதைகளையும்
எழுதிக் குவித்தார் சேக்ஸ்பியர்.

சேக்ஸ்பியர், புகழோடு நாடகங்கள் படைத்துக் கொண்டிருந்த காலத்தில், வாழ்ந்த மேதைகள் சாதாரண ஆட்களல்லர். கவிஞர் எட்மண்ட் ஸ்பென்சர், பெரும் பேச்சாளர் பிரான்சிஸ் பேக்கன், நவகவி பிலிப் சிட்னி, நாடகக் காவியக் கவிஞர்கள் மார்லோ, கிரீன், பென்ஜான்சன், சாப்மேன்... போன்ற புகழ்பெற்ற மனிதர்கள் நாடறிந்தவர்களாக இருந்தார்கள்.  (நம்முடைய புதுமைப்பித்தன், கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்ற மேதைகளின் வாழ்வும்தான்)

சேக்ஸ்பியரின் முதல் நாடகம், "லவ்ஸ் லேபர் லாஸ்ட்" தொடர்ந்து எழுதி அரங்கேற்றப்பட்ட முதல் ஆறு நாடகங்களில் குறிப்பிடத்தக்கவை “ரோமியோ அண்டு ஜூலியட்டும்" "இளவேனிற் காலக் கனவும்".

தொடர்ந்து எழுதிப் புகழ் சேர்த்த நாடகங்களில் அவரது இளமைக்கால மனக் காயங்கள் தென்படுகின்றன. நிறைவற்ற மணவாழ்க்கை, புத்திரசோகம், வாழ்க்கையின் வீழ்ச்சி, வேதனை, வறுமை எல்லாம் அங்கங்கே அனுபவ பூர்வமாக வெளிப் படுகின்றன.


மதுச் சாலைகளிலும், வேசிகளின் வீடுகளிலும், அட்டும் அழுக்கும் இருளும் குடி கொண்டிருக்கும் சந்து பொந்துகளிலும் அலைந்து திரிந்து உண்மையான வாழ்வின் உயிர்த்துடிப்பை உணர்ந்தார்.

வாழ்நாள் முழுதும் தம் மனைவி மக்களைக் காக்கக் கடுமையாக உழைத்தார். செல்வம் சேர்ந்ததும் சொந்த ஊரில் ஒரு பெரிய மாளிகையை விலைக்கு வாங்கினார். மகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். குடும்பம் வசதியாக வாழ வழிவகை செய்தார்.

தனக்குப் புகலிடம் தந்த, வாழ்வளித்த “குளோப்” நாடக அரங்கைத் தவிர வேறு எந்த நிறுவனத்திற்கும் அவர் நாடகம் எழுதித் தரவில்லை. வாழ்நாள் முழுதும் அந்த அரங்கோடு மட்டுமே அவர் வாழ்க்கை பந்தப்பட்டிருந்தது.

எல்லையற்ற மானுட நேயமே சேக்ஸ்பியர், “ஆ! மனிதன்தான் எப்படிப்பட்ட அற்புதப்படைப்பு!” என்பதுதான் சேக்ஸ்பியரின் சிகரமான செய்தி.

இருபது ஆண்டுகள் இடைவிடாத நாடகக் கலைப் பணியில் தளர்ந்துபோன கவிஞர் நோய்வாய்ப் பட்டார். அதன் காரணமாகச் சொந்த ஊருக்குத் திரும்பினார்.
1616 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள், 52-ஆவது வயதில், பிறந்த நாளன்று, மகாகவியின் வாழ்க்கை நாடகத் திரை வீழ்ந்தது.

 உலக நாடகக் கலையின் திரை உயர்ந்த நாள் அது!

இது ஒரு வெனிஸ் நகரத்து வியாபாரியின் கதை ;நண்பர்களின் நட்பை பாராட்டும் கதை ;நண்பர்களின் வஞ்சகம் தீர்த்துக் கொள்ளும் கதை ;நண்பர்களுக்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு கதாபாத்திரத்தின் கதை .நண்பனுக்காக நண்பன் மனைவி செய்கின்ற உதவிகளை விவரிக்கின்ற கதை .இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் .பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பு அளிக்கின்ற வகையில் கதை எழுதப்பட்டு இருக்கிறது.

மொத்தம் 16 அத்தியாயங்களில் இந்த நாவல் அல்லது புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

ஆண்டனியோ .இது முக்கியமான கதாபாத்திரம். இவரின் பல நண்பர்களில் முக்கியமான இருவர்,லோரென்சோ..
பஸ்ஸானியோ.
 
இவர் நண்பருக்காக எதை வேண்டுமானாலும் செய்வார். இவர் ஒரு பெருத்த வியாபாரி .கப்பல் மூலமாக வெளி நாடுகளுக்கு பொருட்களை அனுப்பி வியாபாரம் செய்கின்ற அளவிலே பெருத்த கனத்த வியாபாரி .தன்னிடம்  உள்ள பொருட்களை எல்லாம் ஒரு நான்கு ஆறு மாதங்களுக்கு முதலீடு செய்து கப்பலில் அனுப்பிவிடுவார் .அது வரும் வரை கலங்காதே மனமே என்று காத்திருப்பார் .முதலீடு செய்த பணத்தை விட இரண்டு மடங்கு அதிகமான லாபத்தை பெற்று தருகின்ற அளவிலே அவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் .இவருக்கு ஐந்து நண்பர்கள் .

அதில் ஒரு நண்பன் பஸ்ஸானியோ, போர்ஷியா
காதலில்விழுந்துவிட்டான் .

காதலியை அடைவதற்கு 3 ஆயிரம் பொற்காசுகள் தேவைப்படுகிறது அவனுக்கு .இந்த கதை வெனிஸ் நகரத்தில் நடக்கிறது .இவனது காதலி இருக்கின்ற இடமோ வேறு தேசம் .இரண்டு இடங்களில் நடக்கின்ற கதைகளை ஒன்றாக்கி தந்து இருக்கிறார் ஷேக்ஸ்பியர் அவர்கள்.

நண்பனுக்கு உதவ வேண்டுமே என்கிற எண்ணத்தில் துடிக்கின்ற ஆன்டனியோ கையில் காசு இல்லாத நிலையில் என்னை நம்பி யாரேனும் காசு கொடுத்தால் அதை நான் வாங்கித் தருகிறேன் அல்லது நீயாகவே சென்று யாரிடமாவது கேட்டுப்பார் அதற்கு நான் ஜாமீன் தருகிறேன் என்று நண்பனுக்கு உறுதி அளிக்கிறார் ஆண்டனியோ .

அந்த விதமாக வெனிஸ் நகரத்தில் உள்ள ஒரு வட்டிக்கடை வியாபாரி ஷிலக்கிடம் சென்று நண்பன் 3000  பொற்காசுகள் கேட்க அதற்கு என்ன கேரன்டி என்ன உத்திரவாதம் என்று கேட்க ஆண்டனியோ பெயரை சொல்லுகிறான் .

அந்த வியாபாரிக்கும் ஆண்டனியோவுக்கும் ஏற்கனவே மனதில் சற்று விரிசல் ஏற்பட்டு எதிரிகளாகவே இருக்கின்றார்கள் .இதுதான் சமயம் என்று ஆண்டோனியாவை பழி தீர்க்க முற்படுகிறார் வியாபாரி .அதற்காக 3 ஆயிரம் பொற்காசுகள் தருவதாக ஒப்புக்கொண்டு அதற்கு வட்டி எதுவும் தேவையில்லை ஆனால் குறித்த காலத்திற்குள் மூன்று மாதத்திற்குள் அந்த 3000 பொற்காசுகளையும் திருப்பி தந்து விட வேண்டும் ;அப்படி தர தவறினால் வட்டிக்கடை வியாபாரி விரும்புகின்ற இடத்திலிருந்து ஆன்டனியோ சதை கறி உடம்பிலிருந்து சதைக்கறியை அறுத்து எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் .இதனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்து தர வேண்டும் என்று சொல்ல ஆண்டனியோ
 ஒப்புக்கொள்கிறான் .

இது யூதர்களுக்கும் கிறிஸ்துவ மதத்தவர்களுக்கும் நடக்கின்ற போட்டி என்று சொல்லலாம் ;பொறாமை என்று சொல்லலாம்; பூசல் என்று சொல்லலாம் ;சண்டை என்று சொல்லலாம் ;இரு மதப் பிரச்சினைகளை தழுவிக் கொண்டு செல்கிறது இந்த கதை சில இந்த சமயத்தில்.

மூன்றாயிரம் பொற்காசுகளை எடுத்துக்கொண்டு காதலியை காணச் செல்கிறான் நண்பன்.

வட்டிக்கடை வியாபாரி ஷிலக்
மகள் ஜெஸ்சிக்கா.,ஆன்டனியோவின் மற்றொரு நண்பனை லோரென்சோவைக் காதலிக்கிறாள் .அவர்கள் இருவரும் அந்த நண்பனோடு ஊரைவிட்டு பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்கள் .

வட்டிக்கடை வியாபாரியின் வீட்டில் இருந்தவன் இந்த நண்பரிடம் பணிக்கு வந்து சேர்ந்து விடுகிறான்.

சில சமயம் ஆன்டனியோ மௌனமாக இருந்து விடுகிறான் .மௌனத்தையே கவசமாக கொண்டு அமர்ந்திருக்கிறான் .அந்த சமயத்தில் அவனது நண்பர்கள் அவனை மகிழ்விப்பதற்காக வேண்டி சொல்லுகின்ற வார்த்தைகள் ஷேக்ஸ்பியரின் திறமையை தான் காட்டுகிறது .அந்த சில வார்த்தைகளை பார்த்து விடுவோமே.

ஒரு நண்பனை விளித்து கூறுகிறான்.. ''கிரேஷியானோ, உலகத்தை நான் ஒரு நாடக அரங்காக மதிக்கின்றேன். அந்த அரங்கில் ஒவ்வொரு மனிதனும் அவனவன் பாத்திரத்தை நடிக்கிறான். எனக்குக் கிடைத்துள்ள பங்கு, சோகம்! அதனால் நான் சோகமாக நடிக்கின்றேன்” என்று விடையளித்தான் அண்டோனியோ.

அதற்கு அந்த நண்பன் இப்படி சொல்கிறான்:

 'அண்டோனியோ, உனக்காக நான் ஒரு விகட கவியாக மாறுகின்றேன்; திரையை அளிக்கின்ற முதுமை என்னை அடையவதானாலும், மகிழ்ச்சியோடு வேடிக்கையோடும் அதை வரவேற்பேன். பெருமூச்சுகள் விளைவால் இருதயம் குளிர்வதைக் காட்டிலும், திராட்சை இரசத்தால் கல்லீரல் எரியுறுவதே நன்று. இளமைத் துடிப்புகள் நிறைந்த ஒரு மனிதன், வெண் கல்லில் செதுக்கிய அவன் மூதாதையர் உருவத்தைப்போன்று பேசாமல் உட்கார்ந்திருக்க வேண்டியதேன்? இத்தகைய சோக மௌனத்தை நான் வெறுக்கின்றேன்.

எப்போதும் கடுகடுப்பாகவும், சோம்பலாகவுமிருந்தால் மஞ்சள்காமாலை நோய்க்கல்லவோ ஆளாகவேண்டி நேரிடும்? அண்டோனியோ, நான் உன்னை நேசிக்கின்றேன்; உன்மீது அன்பு பாராட்டுகின்றேன். அந்த அன்பு உன்னிடம் என்னைப் பேசவைக்கின்றது. அண்டோனியோ, பாலை ஏடு மறைப்பதுபோன்று, அசையா நீர் நிலையை நுரை மறைப்பதுபோன்று, மனிதரில் சிலர், தம்மைப் பார்க்கின்றவர்கள் தாம் சிந்தனையாளர்களாவும், அறிவுடையவர்களாகவும், ஆழ்ந்த எண்ணமுடையவர்களாகவும் மதிக்கப்படவேண்டும் என்ற காரணத்தால் தம்முள் நிறைந்துள்ள வருத்த சிந்தனையை மறைக்க மௌனமுற்றிருக்கின்றார்கள்;

அவர்களின் உள்ளத்துள் புதைந்துள்ள வருத்தத்தை அறியாதவர்கள், "என்று சொல்லுகிறான்.

அந்த காலத்திலேயே மது அருந்தினால் கல்லீரல் கெட்டுப் போகும் என்று அறிந்திருக்கிறார் வைத்தியர் ஷேக்ஸ்பியர்.

பதில் சொல்லும் விதமாக ஆன்டனியா கூறுகிறான்..
கிரேஷியானோவின் வார்த்தையைக் கேட்ட அண்டோனியோ, "கிரேஷியானோ, இனி நான் மௌனம் நீங்கிப் பேசுகின்றேன்'” என்றான்.
'அண்டோனியோ, அசை போடும் எருதுவினிடத்திலும், விலை போகாத மங்கையினிடத்திலும்தான், மௌனம் குடி கொள்ளத் தக்கது. நீ உன் நா திறந்து பேச முயற்சிப்பது கண்டு மகிழ்ச்சி " என்று கூறுகிறான் .

பெல்மாண்ட் நகரில் வசிக்கின்ற போசியாவை பஸ்ஸானியா காதலிப்பதாக திருமணம் செய்துர்க்காக 3000 பொற்காசுகளோடு வருகிறாள் அவளின் தந்தை சுயம்வரம் போல ஒன்றை நடத்துகிறார் மூன்று பாத்திரங்களை வைத்திருக்கிறார் மூடிட்டு தங்க பாத்திரம் வெள்ளி பாத்திரம் ஈய பாத்திரம் என்று தங்கை வெள்ளிப் பிழை என்று மூன்று பேரைகளை வைத்திருக்கிறார் ஒவ்வொன்றின் மீதும் சில பாசங்களை எழுதி வைத்திருக்கிறார் அதில் ஒன்றை தெரிவு செய்து திறந்து பார்க்க வேண்டும் திறந்து பார்க்கும் போது அதனுள் ஓசியா புகைப்படம் இருந்தால் திறந்து பார்த்தவன் அவளை மறந்து கொள்ளலாம் இல்லையென்றால் அவன் சாகும்வரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிற ஒரு ஒப்புதலோடு ஒப்பந்தத்தோடு இந்த திருமண போட்டி நடத்தப்படுகிறது ஒருவரும் இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை.

தோழிநெரிஸ்ஸாவிடம் ,"நான் என் தந்தையின்கட்டளையின்படியே கணவனைத் தேர்ந்தெடுப்பேன்; இல்லையேல், கிரேக்க நாட்டுக் கற்புத் தெய்வம் 'டையானா' போன்று கன்னியாகவே, தீர்க்கத் தரிசினியான பெருமாது ‘சிபில்லா' போன்று வயதேறி வாழ்வேன். இதுவரை வந்த காதலர்கள் என்னை என் தந்தையின் கட்டளையைக் கேட்டுத் திரும்பி விட்டதற்காக நான் ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்" என்று தந்யிைன் கட்டளையின்படியே மணம் புரிந்து கொள்ள, தான் எண்ணியுள்ளதைத் தெரிவித்தாள், போர்ஷியா.
ஒரு முறை மொரக்கோ யுவ
 மன்னன் போர்ஷியாவை மணக்க வருகிறான் .அப்போது 3
பேழைகளையும் பார்வை இடுகிறான்.
மோராக்கோ யுவ மன்னன். அந்தப் பெட்டிகளைப் பார்வையிட்டான்.

அவற்றில் முதல் பெட்டி பொன்னால்
ஆக்கப்பட்டிருந்திருந்தது.

அந்தப் பெட்டியின் மேலே, 'என்னை யார் தேர்ந்தெடுக்கின்றார்களோ,
அவர்கள், அநேக மனிதர்கள் விரும்புவதை அடைவார்கள்' என்று
எழுதியிருந்ததைக் கண்டான்.

அடுத்த பெட்டியை நோக்கினான். அது வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. அதன் மேல், 'என்னை யார் தேர்ந்தெடுக்கின்றார்களோ, அவர்கள், எந்த அளவிற்குத் தகுதியோ அந்த அளவிற்குப் பெறுவார்கள்' என்று குறித்திருந்ததைக் கண்டான்.

கடைசியாக ஈயத்தாலான மூன்றாம் பெட்டியைப் பார்த்தான். அதன் மேல், 'என்னை யார் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள்,
உள்ளத்தையெல்லாம் கொடுக்கத் துணிய வேண்டும்' என்று
செதுக்கப்பட்டிருந்தது.

இவற்றைப் படித்த மோராக்கோ இளவரசன்
அருகிலிருந்த அழகி போர்ஷியாவை நோக்கி, "நான் தேர்ந்தெடுக்கும்
பெட்டி சரியானது என்று எப்படி அறிவது?" என வினவினான்.

நீ திறந்து பார்ப்பதில் எனது உருவம் பொறிக்கப்பட்டு இருந்தால் உனக்கு நான் இல்லையென்றால் நீ மணமாகாத பிரம்மசாரியாக காலத்துக்கு கழிக்க வேண்டும் என்று சொல்ல, ஒரு பெட்டியை தெரிவு செய்கிறான் தோற்று போய் ஓடி விடுகிறான்.

அதன் பிறகு பஸ்ஸானியோ
 வருகிறான்,தெரிவு செய்கிறான். மணந்து கொள்கிறான்.

ஆன்டினியோ வியாபாரத்திற்காக அனுப்பிய கப்பல் குறித்த காலத்தில் திரும்ப போகவில்லை. அவனது சதையை கேட்க துடிக்கிறான் கந்துவட்டிக்காரன் .

பிறகு எப்படி அவன் மீளுகிறான் எப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்தார்கள் என்பதை இறுதியில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

மிகவும் பரபரப்பாகவும் திகில் ஊட்டும் வண்ணமும் எழுதப்பட்டிருக்கிறது இந்த நவீன புதினம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.