"விண்ணிழி விமானம்" என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேலே அமைந்துள்ள உள்ள தங்க கோபுர விமானம் விண்ணில் இருந்து வந்த விண்கல்லால் ஆன ஒரு விண்பொருள் என்பது நமக்கு தெரியாத தேவ ரகசியமாகும்.
தேவர்களின் தலைவனான இந்திரன் தன்மீது ஏற்பட்ட கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபட்டான்.
அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான்.
இந்த சுயம்புலிங்கத்தை வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது.
எனவே இந்திரன், அச்சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான்.
தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து
சுயம்புலிங்கத்திற்கு மேலே விமானமாக அமைத்தான்.
இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்று முதலாவதாக இருந்த காரணப் பெயர் பிற்காலத்தில் மறைந்து இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது.
இதற்கு ஆதாரமாக மதுரை கோவில் புராங்களிலுள்ள கீழ்க்கண்ட இரண்டு பாடல்கள் இதை உறுதிபடுத்துகின்றது.
(1)திருவாலவாய்க் காண்டம்
நாற்பத் தொன்பதாவது
திருவாலவாயான படலம்
“தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்
'வானிழி விமானம்'
பொற்றா மரைவிளை யாட்டின் வந்த
கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்
ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத“
(2) திருவிளையாடற் புராணம்
பாம்பு எல்லைகாட்டிய படலம் பாடல் எண் 2340
“நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்
விண்ணிழி விமான
நின் றெழுந்து மீனவன்
திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராய்ப் புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்“
சொக்கநாத பெருமானின் இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.
முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது.
அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை.
மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது.
இந்தக் கடம்ப வனத்தை அழித்து 'வங்கிய சேகர பாண்டியன்' என்பவன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.
அப்போது மதுரையின் பழைய எல்லைகளை காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான்.
மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார்.
சிவபெருமான் சித்தராக தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும் என்பது பரம ரகசியமாகும்.
சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமான மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைப் பெற்று அனைவரும் நல்வாழ்வு வாழ்வோம்.
(இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும்)
திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அர்ச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் திருவீழிமிழலை கோவில் புராணம் கூறுகிறது)
ஆதாரம்:திருப்புகலியும் திருவீழிமிழலையும்291
ஏகபெ ருந்தகை யாயபெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
தையலொ டுந்தள ராதவாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும்
புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை யீசவெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணிவார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
எவ்விதமான விஞ்ஞான வளர்ச்சியும்அடையாத அந்தக்
காலத்திலேயே
இந்த விமானத்தை
பார்ப்பதற்கு ஏதுவாக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் மக்கள் நடந்து செல்லும் வழியில் சண்டிகேசுவரர்
சன்னதிக்குஅருகிலும்
,வெளிப்பிரகாரத்தில்
உள்ள நந்தி மண்டபம் அருகிலும் தரைப்பகுதியில் உள்ள கற்களில் நமது சிற்பிகள் பூப்போன்று வட்டமாகச் செதுக்கி அடையாளப்படுத்தி வைத்துள்ளார்கள்.
அந்த இடத்தில்
நின்று பார்த்தால் மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தின்
கருவறையின் தங்கவிமானத்தை காணலாம்.
இந்த தங்கவிமானத்தைக்
கண்டு வணங்கிட
விரும்புபவர்கள்,
இந்த இடத்தைத்
தேடிச்சென்று, அந்தப்
பூவின் மீது நின்று
பார்த்து வழிபடலாம்.
ஆனால், இந்த அமைப்பு
முறையானது நாள்தோறும் நாடெங்கிலும் இருந்து எத்தனையோ பக்தர்கள் அன்னை
மீனாட்சியையும், ஐயன்
சோமசுந்தரேசுவரரையும்
வணங்கிச்செல்கின்ற பக்தர்கள் அனைவருக்கும்
தெரியாமல் உள்ளது.
இவர்கள் அனைவரும்
இந்த எளிய வசதியை
பயன்படுத்தி கொள்ளும்
வகையில் இதுபோன்ற
இடங்கள் குறித்து கோயில்
புத்தகங்களிலும், தகவல்
பக்கங்களிலும் இடம் பெறச்
செய்தால் பக்தர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் செல்வோர் தவறாமல் இந்த இடங்களில் நின்று விண்ணிழி விமானத்தை வணங்கி சிவபெருமானிடம் வேண்டிய வரங்களை பெற்றுக்கொள்வோம்.
அறிவியல் அடிப்படையில் திருவிளையாடற் புராணக் கருத்தை நோக்கினால்,
சந்திரனில் விண்கற்கள் விழுந்ததால் உண்டான பள்ளங்கள் போன்று, மதுரைக்கு அருகிலும் விண்கற்கள் விழுந்த இடங்களில் பெரும் பள்ளங்கள் உருவாகியிருக்க வேண்டும் அல்லவா?
மதுரையைச் சுற்றிலும் விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.