நம்மைக் காக்க சிவபெருமான் விஷம் அருந்திய பிரதோஷ தினம்.
ஐந்தெழுத்து மந்திரம் சிவாய நம
சி – படைத்தல் – உடுக்கை ஏந்திய திருக்கரம்.
ய – காத்தல் – அமைந்த திருக்கை.
ந – அழித்தல் – அனல் ஏந்திய திருக்கை.
ம – மறைத்தல் – ஊன்றிய திருவடி.
வ – அருளல் – தூக்கிய திருவடியைச் சுட்டும் வீசிய திருக்கை.
ஐந்தும் சிவபெருமானும்
சிவபெருமான் ஆபரணமாகத் தரித்துள்ள பாம்பின் படம் ஐந்து.
வெற்றி கொள்ளத்தக்க புலன்கள் ஐந்து.
சிவபெருமான் நெற்றிக்கண் கொண்டு எரித்த மன்மதனின் அம்புகள் ஐந்து (பால், தயிர், நெய், கோநீர், கோமயம்)
சிவபெருமான் பூசனையாகக் கொள்வதும் ஐந்து (பசுவின் பஞ்சகவ்யம் எனப்படும் பால், தயிர், நெய், கோநீர், கோமயம்)
சிவபெருமானைத் துதிக்கும் ஐந்தெழுத்து மந்திரம் ஓம் நமசிவாய
சிவசொரூபத்தின் மகிமை
நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதே சிவசொரூபம் எனப்படும்.
சிவபெருமான் சூடியிருக்கும் சந்திரன் – மனிதனுக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பதை உணர்த்தும் (சந்திரனின் வளர்பிறையும் தேய்பிறையும்)
சிவபெருமானின் தலையிலிருக்கும் கங்கை – எந்தச் சூழ்நிலையிலும் மனிதன் ஆசா பாசங்களுக்கு அடிமையாகி மனம் கெட்டுவிட அனுமதிக்கக் கூடாது என்பதை உணர்த்தும் (எவ்வளவு அழுக்குகள் சேர்ந்தாலும் தன்னைத் தானே கங்கை சுத்தப்படுத்திக் கொள்ளும் என்பதை அறிக)
சிவபெருமானின் கழுத்தைச் சுற்றியிருக்கும் பாம்பு – மிருக உணர்ச்சிகள் நம்மைப் பாதித்தாலும், அதனால் நாம் உணர்ச்சிகளை இழக்காமல் உயர்ந்த பண்புடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும்.
தன்னில் பாதியாக உமையவளைக் கொண்டவர் – உமையவள் தன்னில் பாதியாக இருப்பிலும், சிவபெருமான் காமத்தை வென்றவர் (காமனை எரித்தார்)
ஓம் நமசிவாய !