தேவையானவை:
1. புழுங்கல் அரிசி
2. பச்சரிசி
3. தேங்காய்
4. உப்பு
5. பெருங்காயம்
6. சமையல் சோடா
செய்முறை:
1. இரண்டு அரிசிகளையும் நன்கு களைந்து நீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
2. உடனுக்குடன் துருவிய தேங்காய் துருவலை அரிசிகளுடன் மிக்சியில் போட்டு வெண்ணெய் போல் அரைத்துக் கொண்டு உப்பு, பெருங்காயத் தூள் (ஒரு சிட்டிகை), சமையல் சோடா இவற்றை போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
3. ஆப்பக் குழி (பாத்திரக் கடைகளில் கேட்டால் கிடைக்கும்) என்னும் பாத்திரத்தில் ஒவ்வொரு குழியிலும் டால்டா அல்லது நெய் விட்டு , அதில் சிறிதளவு மாவை விட்டு வெந்ததும் கரண்டிக் காம்பால் திருப்பிப் போட்டு சிறிதளவு டால்டா விட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடம் கழித்து (நீங்கள் வைக்கும் சூட்டை பொறுத்து) எடுக்கலாம். கூடிய வரையில் டால்டாக்கு பதில் எண்ணெய் அல்லது நெய்யை பயன்படுத்துங்கள்.
4. ஆப்பக் குழி அவசியம் தேவை என்று இல்லை. அது இல்லாதவர்கள் ஒரு சிறிய வாணெலியில் ஒவ்வொன்றாகச் செய்யலாம். ஆனால், ஆப்பம் நன்கு வேக ஒரு மூடி கொண்டு அவ்வப்போது மூட வேண்டும். பின்பு மூடியை எடுத்து விட்டுத் திருப்பிப் போட்டு நெய் ஊற்றி மறுபடியும் மூடி வேகும் வரை வைக்க வேண்டும்.
5. ஆப்பம் என்றாலே அதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய்ப் பால் சுவையாக இருக்கும்.