தேவையானவை:
பொருள் - அளவு
மைதா மாவு400 கிராம்
பேக்கிங் பவுடர்4 ஸ்பூன்
சர்க்கரை200 கிராம்
வெண்ணெய்200 கிராம்
முட்டை4
வாழைப் பழம்3
பால்100 மில்லி
செர்ரி பழம்60
செய்முறை :
வாழைப்பழ கேக் செய்வதற்கு முதலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் இரண்டையும் ஒன்றாகக் கலந்து மூன்று முறை சலித்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நுரை வரும் வரை அடிக்கவும்.
பிறகு வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து அதனுடன் பாலைச் சேர்த்து நன்கு அரைத்து, அதனுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு கரையும் வரை நன்றாகக் கலக்கவும்.
பிறகு சலித்து வைத்துள்ள மாவில் வெண்ணெய் சர்க்கரை குழைத்த கலவையைச் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடிக்கவும்.
பிறகு அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் அரைத்த வாழைப்பழ விழுது ஆகியவற்றைச் சேர்த்து கலக்கி, கேக் கலவையை வெண்ணெயை மற்றும் மாவு தடவி வைத்துள்ள பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்யவும். சுவையான வாழைப்பழ கேக் ரெடி.