தேவையானவை:
1. முட்டை
2. கருவேப்பிலை
3. உப்பு
4. எண்ணெய்
5. மிளகாய்த் தூள்
6. பெரிய வெங்காயம்
7. தனியாத் தூள்
8. மிளகுத் தூள்
9. பச்சை மிளகாய்
செய்முறை:
1. முட்டை நான்கையும் நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
2. மிளகாயையும், வேக வைத்த முட்டையையும் நான்காக கீறிக் கொள்ளவும்.
3. வெங்காயத்தை சிறிய துண்டுகளாக சதுரம், சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு நன்கு தாளிக்கவும்.
5. பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகிய இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
6. பின்னர் அதே வாணலியில் மிளகுத் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள், முட்டை என எல்லாவற்றையும் சேர்த்து தேவைக்கு தகுந்தபடி உப்பு சேர்த்துக் கிளறவும்.
7. முட்டை மசாலாவுடன் சேர்ந்து வந்ததும் இறக்கி விடலாம்.
8. இதோ இப்போது செட்டிநாடு முட்டை மசாலா தயார். இது கலவை சாதத்திற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
முட்டை கண் பார்வைக்கு நன்மை செய்யும்.