தேவையானவை:
சிக்கன்
சின்ன வெங்காயம்
தக்காளி
காய்ந்த மிளகாய்
பச்சை மிளகாய்
மிளகு
தனியா தூள்
சிக்கன் மசாலா தூள்
இஞ்சி
பூண்டு
சீரகம்
சோம்பு
தேங்காய்
மஞ்சள் தூள்
உப்பு
எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், 1/4 கப் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, மூன்று காய்ந்த மிளகாய், நான்கு ஸ்பூன் மிளகு, இரண்டு ஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், நான்கு ஸ்பூன் தனியா தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
ஆறிய பின், ஒரு டம்ளர் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும்.
பொடியாக நறுக்கிய இரண்டு ஸ்பூன் இஞ்சி, நான்கு பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 கப் துருவிய தேங்காய், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 500 கிராம் சிக்கன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின், அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது, நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் வேக வைக்கவும்.
பின்னர், தேங்காய் விழுது சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 20 நிமிடம் கொதிக்க வைக்கவும்.