தேவையானவை:
வாழைப்பூ அரை கப்
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு பல் 8
தனியா ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன்
தனியா தூள் ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
சீரகம் ஒரு டீஸ்பூன்
சோம்பு அரை டீஸ்பூன்
வெந்தயம் அரை டீஸ்பூன்
கடுகு முக்கால் டீஸ்பூன்
கடலை மாவு அரை கப்
அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். புளியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
வாழைப்பூவை சுத்தம் செய்து அதில் உள்ள நரம்பை நீக்கி விடவும். சுத்தம் செய்த வாழைப்பூவை தண்ணீரில் அலசி விட்டு அப்படியே இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு போட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
அதில் வேக வைத்த வாழைப்பூவை போட்டு பிசைந்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு போட்டு தாளித்துக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
அதனுடன் தக்காளியை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு போட்டு மேலும் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.
பின்பு பொரித்து எடுத்து வைத்திருக்கும் வாழைப்பூவை போட்டு கிளறி பரிமாறவும். சுவையான வாழைப்பூ குழம்பு ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.