தேவையானவை:
1.5கப் பாஸ்மதி அரிசி
2பெரிய வெங்காயம்
1தக்காளி
2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
4பச்சை மிளகாய்
1.5ஸ்பூன் கரம் மசாலா
1/4கட்டு மல்லித்தழை
1/4கட்டு புதினா
2டேபிள் ஸ்பூன் தயிர்
1/4துண்டு எலுமிச்சம் பழம்
2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
2டேபிள்ஸ்பூன் நெய்
2பிரியாணி இலை
2இன்ச் பட்டை
4கிராம்பு
2ஏலக்காய்
1கருப்பு ஏலக்காய்/1அண்ணாச்சி பூ
1மராட்டி மொக்கு
தேவையானவை:
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 45நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம்,மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
வதங்கியதும்,கரம் மசாலா சேர்த்து கலந்து விட்டு பின் நறுக்கிய மல்லித்தழை புதினா சேர்த்து வதக்கவும்.பின் தயிர் சேர்க்கவும்.
2 1/4 கப் தண்ணீர்(1cup அரிசிக்கு 1.30கப் அளவில் தண்ணீர்) மற்றும் பெரிய துண்டுகளாக நறுக்கிய தக்காளி(முதலிலேயே சேர்த்தால் தக்காளியின் நிறம் கலந்து விடும்.வெண்மை நிறம் கிடைக்காது) சேர்த்து மூடி போட்டு மீடியம் தீயில் கொதிக்க விடவும்.
கொதித்ததும்,ஊற வைத்த அரிசி சேர்த்து சிறு தீயில் மூடி போட்டு வேக விடவும்.கொதிக்க ஆரம்பிததும், உப்பு சரி பார்த்து,எலுமிச்சை சாறு விட்டு கலந்து விடவும்.
8நிமிடங்களில் அரிசி முக்கால் பதம் வெந்து தண்ணீர் வற்றி விடும்.நடுவில் தோண்டி பார்தால் தண்ணீர் இல்லாமல்,அரிசியும் தண்ணீரும் சமமாக இருக்கும்.இனி,தம் போடவும்.
சிறு அடுப்பில்,சிறுதீயில் தோசைக் கல்லில் பாத்திரத்தை வைத்து மூடி போட்டு மேலே வெயிட் வைத்து 15நிமிடங்கள் வைக்கவும்.பின் ஸ்டோவ்-வை அனைத்து10நிமிடங்கள் கழித்து பரிமாறலாம்.
அவ்வளவுதான். சுவையான,மணமான, கறி மற்றும் காய் சேர்க்காத வெள்ளை குஸ்கா ரெடி.