தேவையானவை:
பாசுமதி அரிசி- ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை -ஒரு கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம்- கால் கப்
நீளமாக நறுக்கிய கேரட்- ஒன்று
வேகவைத்த உருளைக்கிழங்கு -ரெண்டு
வேர்க்கடலை -ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்- 4
பிரிஞ்சி இலை- ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன்
நெய், எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
பாஸ்மதி அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து நெய்யில் ஈரம் போக வறுத்து வைக்கவும்....
குக்கரில் எண்ணெய் விட்டு வேர்க்கடலை, பிரிஞ்சி இலை, தாளித்து, கீறிய பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றை போட்டு வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி வெந்தயக்கீரை போட்டு லேசாக வதக்கி கேரட்டையும் அதனுடன் சேர்க்கவும். பின்னர் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்குடன் ஒரு டீஸ்பூன் சாம்பார் பவுடர் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு போட்டு அரிசியை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி நெய் விடவும்.
சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு பரிமாறவும். கேரட் உருளைக்கிழங்கு வேர்கடலை சேர்த்து இருப்பதால் வெந்தயக்கீரை கசப்பு தெரியாமல் இருக்கும். இதனால் சாப்பிட ருசியாக இருக்கும்....