Breaking News :

Sunday, February 23
.

பாத எரிச்சல் குணமாக கற்றாழை!


கற்றாழையை கொண்டு வந்து இதன் மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதை பகுதியை ஏழுதரம் நல்ல தண்ணீரில் அலசி இதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து

இதனோடு ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியை சேர்த்து இதில் சிறிதளவு பனங்கற்கண்டும் சேர்த்து கொண்டு இதை நன்றாக கலக்கி காலை வேளையில் அருந்தி வர தீராத மலச்சிக்கலை தீர்த்து இதன் மூலம் பல நோய்களை உடலிலிருந்து நீக்கி விடும் மேலும் இதனால் நீரடைப்பு நீர் கோவை நோய்கள் நீங்கும் உடலுக்கு அழகும் ஆரோக்கியமும் வெகு எளிதாக கிடைத்துவிடும்
தலைமுடி நீண்டு வளர
 
கற்றாழையின் சோற்றை நன்றாக தண்ணீரில் அலசி நூறு கிராம் எடுத்துக்கொண்டு அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தைல பதத்தில் காய்ச்சி வடித்து கொண்டு இதை தினசரி தலைக்கு தேய்த்து வர தலைமுடி நன்கு வளரும் கண்கள் குளிர்ச்சி பெறும் உடல் சூடு குருவியாக குறைந்துவிடும்.

சோற்று  கற்றாழையின் சதைப்பகுதியில் ஐம்பது கிராம் எடுத்துக்கொண்டு இதில் ஐந்து கிராம் வெந்தயத்தை கலந்து இதை நன்றாக மைபோல அரைத்து தலைக்கு தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் தலை முடி மிருதுவாகி நன்கு செழித்து கருமையாக நீண்டு வளரும்

தோல் நோய்

கற்றாழையின் சதை கொஞ்சம் இதனோடு நன்னாரி வேர் இவை இரண்டையும் சம அளவாக கலந்து இதை நன்றாக அரைத்து சுண்டைக்காய் அளவு இரண்டு உருண்டைகளாக உருட்டி இதை காலை மாலை இருவேளையும் தொடர்ந்து பதினைந்து நாட்கள்  உப்பு புளி காரத்தை குறைத்து சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட பூச்சிக்கடி விஷமும் சர்வசாதாரணமாக விலகும் பூச்சிக்கடி விஷத்தால் தோலில் ஏற்பட்ட  கருப்பு மறைந்து தோலின் நிறம் பழைய நிறத்துக்கு வந்துவிடும்

தீப்புண்

கற்றாழையில் மருந்து நெருப்பு சுட்டு கை கால்களில் புண்கள் ஏற்பட்டு விட்டால் கற்றாழையின் சதைப் பகுதியை அரைத்து புண்களின் மீது பூசி வர தீயினால் சுட்ட புண்கள் விரைவாக ஆறிவரும்

ஒரு பெரிய மடல் கட்டளையை ஒடித்து அதில் வழியும் மஞ்சள் திரவத்தை தீப்புண்ணின் மீது பூசி வந்தாலும் புண்கள் வெகு விரைவாக ஆறிவிடும்

கண்களுக்கு

இரண்டு கண்களையும் மூடி கொண்டு கண் மற்றும் இமைகளின் மீது கற்றாழையின் சதையை வைத்து கட்டி அரை மணி நேரம் கழித்து அவிழ்த்துவிட்டு மிதமான சுடுநீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் கண் சூடு கண் எரிச்சல் இவை அனைத்தும் தீரும் கண்கள் குளிர்ச்சிபெறும் பார்வை சக்தி அதிகரிக்கும்

அடிப்பட்ட வீக்கம்

கற்றாழையின் சதைப் பகுதியை நன்றாக அரைத்து அடிபட்ட வீக்கங்கள் மீது பூசிவர வீக்கம் குறையும் வலிகள் நீங்கும்
பாத எரிச்சல் குணமாக

கற்றாழையின் சோற்றை நன்றாக அலசி நூறு கிராம் எடுத்துக்கொண்டு கால் லிட்டர் விளக்கெண்ணையில் இதை கலந்து நன்றாக காய்ச்சி வைத்துக்கொண்டு இரவு படுத்து உறங்கும் பொழுது பாதத்தில் தடவி வர தீராத பாத எரிச்சல் தீரும் இதன் மூலம் கண்களும் குளிர்ச்சி பெறும்

மூலச் சூடு குறைய

ஒரு கைப்பிடி அளவு கற்றாழையின் சோற்றை சிறுசிறு வில்லைகளாக நறுக்கிக் கொண்டு இதை கால் லிட்டர் பசும்பாலில் ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து இந்தக் கற்றாழையின் தோசை வாயில் விழுங்கி சிறிது பசும்பாலும் குடித்துவர ஆசனவாய் எரிச்சல் குணமாகும் மூலச்சூடு நீங்கும் மற்றும் சிரங்கு போன்ற தோல் நோய்கள் விலகும்

சிறுநீர் எரிச்சல்

ஒரு கைப்பிடி அளவு கற்றாழை சோற்றுடன் ஐந்து கிராம் பனங்கற்கண்டு சேர்த்து இதை  வாயிலிட்டு விழுங்கி சிறிது பசும்பால் அருந்தி வர சிறுநீர் எரிச்சல் நீங்கும் உடலில் ஏற்படும் சொறி அரிப்பு சிரங்கு இவைகள் குணமாகும்
கற்றாழையை சாப்பிட்டு வந்தால் தோல்கள் பளபளக்கும் தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கும்

எலும்புருக்கி நோய்

கற்றாழையின் சோற்றை கால் கிலோ இதை நன்றாக மை போல அரைத்து எடுத்துக் கொண்டு இதை அரை லிட்டர் விளக்கெண்ணையில் கலந்து ஊறவைத்து ஒரு நாள் கழித்து அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி வைத்து கொண்டு இதில் ஒரு ஸ்பூன் வீதம் காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர எலும்புருக்கி நோய் குணமாகும்

வயிற்றுப்புண்

கற்றாழையின் சதைப் பகுதியை நன்றாக அலசி இதில் ஒரு கைப்பிடி எடுத்து கொண்டு காலை வெறும் வயிற்றில் இதை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர தீராத வயிற்றுப் புண்கள் தீரும் அல்சர் நோயால் அவதிப்படுபவர்களுக்கு இது அருமருந்தாக அமையும்
கற்றாழைச் சோற்றை தினந்தோறும் சாப்பிட்டு வர உடலில் மூல நோய் வராத வண்ணம் நமது உடலை காக்கும்

கற்றாழை சோற்றை சாப்பிட்டுவர வயிற்றில் ஏற்படும் ரணம் வயிற்று மந்தம் வயிற்று வலி வயிற்று பொருமல் மற்றும் உஷ்ண வாயு இது போன்ற வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்

கற்றாழை உடலுக்கு மருந்து அல்ல  அது உடலை தேற்றும் ஒரு மாபெரும் விருந்து.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.