சுக்கிரன் ராசிக்கு 9-ஆம் இடமான பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் நன்மைகள் பல காணலாம் புதிய வாகன யோகமும் சிலருக்கு புது வீடு கட்டும் அமைப்பும் உள்ளது. எளிதில் லோன் கிடைக்கும் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் உறவினர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் அகலும்.
11-ம் இடத்தில் குருபகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும் திருமண காரியங்கள் கைகூடும்.
3-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் வெளிநாடு யோகம் அமையும் உடல் ஆரோக்கியம் காணப்படும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும்.
பிப்ரவரி 11-ம் தேதி வரை புதன் 7-ம் இடத்தில் பலம் இழந்து காணப்பட்டாலும் பிறகு 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் பலம் பெறுகிறார் இதனால் திடீர் பணவரவுகள் உண்டாகும் கொடுத்த பணம் வசூல் ஆகும். ஓய்வூதிய பணங்கள் இன்சூரன்ஸ் போன்ற பணங்கள் கைக்கு கிடைக்கும் பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.
அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் எதிலும் முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாருக்கும் வாக்குறுதிகள் வழங்காதீர்கள்.
9-ம் வீட்டில் ராகுபகவான் சஞ்சரிப்பதால் தந்தை மகனுக்குள் தேவையில்லாத மனஸ்தாபங்கள் வரக்கூடும் கவனம் வீண் வாக்கு வாதங்களை தவிர்கவும்.
சூரியன் இம்மாதம் 7 மற்றும் 8-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுகிறார். தேவையில்லாத பிரச்னைகள் சிக்கி கொள்வீர்கள் பெரிய மனிதர்களிடம் பகை வளர்த்துக் கொள்ளாதீர்கள் அரசியல் செல்வாக்கு குறையும் பலவீனமாக காணப்படுவீர்கள்.
12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபம் அதிகமாக காணப்படும். தொழில் போட்டிகள் இருக்கும் அவசர முடிவுகளை தவிர்கவும்.
பிப்ரவரி 27,28,29 சந்திராஷ்டமம்
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய திங்கட் கிழமைகளில் நவகிரக சந்திரனுக்கு அர்ச்சனை செய்து வரவும் பெருமாள் வழிபாடு சிறப்பை தரும்.