இந்த பிப்ரவரி மாதம் சுக்கிரன் 1ம் இடத்தில் நற்பலன்களை வழங்குவார். தொழில் வியாபாரங்கள் நல்ல லாபத்தை தரும் கணவன் மனைவி உறவு பலப்படும்.
புதிய வாகன யோகம் அமையும்.
பிப்ரவரி 11ம் தேதிவரை புதனும் 13 ம் தேதி வரை சூரியனும் பலத்துடன் 11-ம் இடத்தில் நற்பலன்களை வழங்குவார்கள் இதனால் அரசாங்க ஆதயமும் நன்மதிப்பும் பெறுவீர்கள் திடீர் பண வரவுகளால் பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கும் .கூட்டுத்தொழில் லாபத்தை தரும்.
மேற்ச்சொன்ன தேதிக்கு பிறகு இவ்விரண்டு கோள்களும் பலவீனப்படுகிறது. ராசிக்குள் ராகு இருப்பதால் மருத்துவ விரையங்கள் உண்டாகும் உடல்நலனில் கவனம் தேவை.பங்குசந்தை முதலீடுகள் தவிர்கவும்.
12ம் இடத்தில் விரைய ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை யாருக்கும் முன் ஜாமின் தராதீர்கள்.
3 ல் குரு ஆடம்பர செலவுகளை தவிற்க்கவும் தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். 4-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம் கோபத்தை வெளிகாட்டாதீர்கள்.
7-ம் இடத்தில் கேது இருப்பதால் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள் யாரிடமும் வம்பு வைத்து கொள்ள வேண்டாம்.
பிப்ரவரி 18,19,20 சந்திராஷ்டமம்
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் வினாயக பொருமானுக்கு அர்ச்சனையும், சனிபகவான் வழிபாடும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.