இம்மாதம் சுக்கிரன் பலம் பெற்று 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பெருகும் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் உறவினர்களால் நற்செய்தி ஒன்று கிடைக்கும் வெளியில் கொடுத்த பணம் திடீரென உங்கள் கைக்கு கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும் புதிய வாகன யோகமும் சிலருக்கு புது வீடு கட்டும் அமைப்பும் உண்டு.
ராசிக்கு 11ம் இடத்தில் ராகு இருப்பதால் திடீர் தன உறவு உண்டாகும் காரிய தேவைகள் பூர்த்தியாகும் வெளிநாடு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு அன்னிய மொழிக்காரர்களின் ஆதரவும் உதவிகளும் கிடைக்கும்.
சனிபகவான் தொழில் ஸ்தானமான 10-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில் முதலீடுகளால் லாபம் பன்மடங்கு உயரும் தொழில் வியாபாரங்கள் வளர்ச்சி பெறும் நல்ல லாபத்தை தரும்.
புதன் இம்மாதம் 11ம் தேதி வரை பலவீனமாக காணப்பட்டாலும் பிறகு 10-ம் இடத்திற்கு வருகிறார்.
புதன் வருகையால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் மந்த நிலை மறையும் புத்தி கூர்மையால் பணவரவுகள் அதிகரிக்கும் பிப்ரவரி 13ஆம் தேதி வரை சூரியன் 9-ம் இடத்தில் பலவீனமாக காணப்பட்டாலும் பிறகு பத்தாம் இடத்திற்கு சென்று புதன் மற்றும் சனிபகவானுடன் இணைந்து நற்பலன்களை வழங்குவார் தந்தை மகன் உறவு பலப்படும் அரசியல் செல்வாக்கும் அரசாங்க ஆதரவும் கிடைக்கும் போட்டி தேர்வுகள் வெற்றி பெறுவீர்கள்.
ராசிக்குள் குருபகவான் சஞ்சரிப்பதால் விரைய செலவுகள் உண்டாகும் ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்புகளில் நாட்டம் செலுத்துங்கள் தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள் கடன் வாங்கி செலவு செய்யாதீர்கள்.
இரண்டாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபம் அதிகமாக காணப்படும் அவசர முடிகளை தவிர்க்கவும் சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
5-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும் புத்திர வகைகள் விரையங்கள் உண்டாகும் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவதால் மனம் அமைதி பெறும்.
பிப்ரவரி 23,24 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில்
மஹாலட்சுமி வழிபாடும்.
இம்மாதம் வரக்கூடிய அமாவாசை அல்லது பௌர்ணமி திதியன்று குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவதால் நல்லது நடக்கும்.