இந்த பிப்ரவரி மாதம் ராசிக்கு 6-ம் இடத்தில் ராகு மட்டுமே நற்பலன்களை வழங்குவார் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் மனம் அமைதி பெறும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
திடீர் தன வரவுகள் உண்டாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
இம்மாதம் 11ம் தேதிவரை மட்டும் 4ம் வீட்டில் புதன் சற்று பலம் பெற்று சஞ்சரிப்பார். காரிய வெற்றிகள் நினைத்த காரியம் நடக்கும்.
11ம் தேதிக்கு பிறகு 5ம் இடத்தில் பலவீனப்டுகிறார் தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
இம்மாதம் சூரியனும் 4-5ம் இடங்களில் பலவீனமாக காணப்படுகிறார் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.
சுக்கிரன் 6-ம் இடத்தில் இருப்பதால் பெண்களால் சங்கடங்கள் வரக்கூடும்.
கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் ஈகோ பிரச்சனைகள் தலைதூக்கும். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
5-ம் இடத்தில் சனிபகவான் இருப்பதால் பிள்ளைகளால் பிரச்சனைகளும் பிணக்குகளும் உண்டாகும் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள் வீண் வாக்கு வாதங்கள் தவிற்க்கவும்.
அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் குரு இருப்பதால் ஆடம்பர செலவுகளை தவிற்க்கவும். தேவையின்றி கடன் வாங்காதீர்கள்.
9-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் முன்கோபம் அதிகமாக காணப்படும்.யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
அவசர முடிவுகளால் பண விரையங்கள் உண்டாகும். 12-ம் இடத்தில் கேது இருப்பதால் ஆன்மீக சுற்றுலாக்கள் இதனால்
சுபவிரைய செலவுகள் உண்டாகும். அன்னிய மொழி நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
பிப்ரவரி 6,7,8 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடும் கால்நடைகளுக்கு
உணவும் வழங்கி வாருங்கள் நல்லதே நடக்கும்.