உங்கள் ராசிக்கு 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை காண்போம். பொதுவாகவே கடக ராசி காரர்கள் எந்தத் துறையில் பிரவேசித்தாலும் அங்கே உங்களின் அதிகாரத்தையும் ஆளுமையும் நிலை நிறுத்துவீர்கள் உங்களோட அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவீர்கள். உங்களுக்கு மேலான அதிகாரத்தில் இருப்பவர்களையும் வலுவிழக்க செய்வீர்கள் உங்கள் ராசிநாதன் சந்திரன் மனோகாரர் ஆவார். ஒருவரை மனதை சந்திரன் புரிந்து கொள்வார் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அவ்வகையில் நீங்கள் வெகுவிரைவில் மற்றவர்களின் இதயத்தில் இடம் பிடித்து விடுவீர்கள்.
இவ்வாண்டு மிக முக்கியமாக கருதப்படக்கூடிய 4 வருட கோள்களும் பெயர்ச்சி ஆகின்றன. வரக்கூடிய மே மாதம் வரை குரு பகவான் 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்து நன்மைகள் பல வாரி வழங்குவார் குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் நடக்கும் குழந்தை பாக்கியம் எளிதில் கிடைக்கும் தன வரவுகள் நன்றாக இருக்கும். தொழில் வியாபாரங்களும் விருத்தியை தரும் கடன்கள் சிறுக சிறுகடைபடும் மே மாதம் பத்தாம் தேதி வரக்கூடிய குரு பெயர்ச்சியானது ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். இதனால் பண விரையங்கள் உண்டாகும். பண சேமிப்புகள் கரையும் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவதால் நன்மைகள் நடக்கும். புத்திர வழியில் சில பல பிரச்சனைகள் வரக்கூடும் வீண் வாக்குவாதங்கள் தவிர்ப்பது நல்லது.
அஷ்டம ஸ்தானமான 8,ம் இடத்தில் அமர்ந்திருந்த சனி பகவான் வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி ராசிக்கு 9ஆம் இடத்துக்கு செல்கிறார். அஷ்டமஸ்தானம் என்பது பல நஷ்டங்களையும் கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து இருப்பீர்கள். தற்சமயம் ஒன்பதாம் இடம் என்பது பெரிய நன்மைகளை வழங்க விட்டாலும் பெரிய பாதிப்புகள் என்பது இருக்காது. 9,ம் இடம் என்பது பூர்வபுண்ணிய ஸ்தானமாக கருதப்படுவதால் பூர்வீக சொத்து பிரச்சனைகள் தந்தை மகனுக்குள் கருத்து வேறுபாடுகள் பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனைகள் உருவாக கூடும் தேவையில்லாத வம்பு வழக்குகள் சிக்கிக் கொள்ளாதீர்கள். பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் எழுத்துக்கள் போடாதீர்கள்.
18 5 2025 அன்று ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. அதுவரை கேது பகவான் மூன்றாம் இடமான உப ஜெய ஸ்தானத்தில் அமர்ந்து நன்மைகளை வழங்குவார். வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் தேக ஆரோக்கியம் காணப்படும். மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் மன மகிழ்ச்சி உண்டாகும் ஆன்மீக எண்ணங்களும் கோயில் தலங்களுக்கும் சென்று வருவீர்கள் மே மாதம் மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்துக்கு கேது பின்னோக்கி வருகிறார் இரண்டாம் இடத்தில் கேது வருவதால் தேவையில்லாத கடன்கள் வாங்க தோன்றும் வேலை பணியிட மாற்றங்களால் மன உளைச்சலும் சங்கடங்களும் வரக்கூடும். சம்பள உயர்வு இருக்காது. வேலைப்பளு அதிகமாக காணப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம் யாருக்கும் வாக்குறுதிகள் வழங்காதீர்கள்.
ராகு ராசிக்கு 9ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் 9-ம் என்பது ராகுவால் நற்பலன்களை வழங்க இயலாது. கடந்த ஆண்டை போலவே இந்த வருடம் வரக்கூடிய ராகு +கேது பெயர்ச்சியிலும் ராகு பகவான் ஒன்பதாம் இடத்தில் இருந்து 8-ம் இடத்திற்கு பின்னோக்கி வருகிறார் அஷ்டம ஸ்தானம் என்பதால் குடும்பத்தில் சங்கடங்களும் சஞ்சலங்களும் உருவாகும். வெளிநாடு வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும் தேவையில்லாமல் பணியிட மாற்றங்கள் செய்யாதீர்கள். இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலையை தேடாதீர்கள். ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் ஆன்லைன் வர்த்தகங்கள் நஷ்டங்களை உண்டு பண்ணும் பெரிதாக முதலீடுகள் போடாதீர்கள்.
பெண்களுக்கு!
வீண் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும் தேவையில்லாமல் கடன்கள் வாங்காதீர்கள் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும் கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்காதீர்கள் விட்டுக் கொடுத்து போகவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு!
தேவையில்லாமல் பணியிடை மாற்றங்கள் செய்யாதீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாக காணப்படும் பணிச்சுமை அதிகமாக இருக்கும் வியாபாரிகள் தொழிலுக்காக புதிய முதலீடுகளும் புதிய கிளைகளும் உருவாக்க வேண்டாம்.
மாணவர்களுக்கு!
கல்வி அறிவு மேம்படும் பாடப்பிரிவுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் படிப்பில் முழு கவனத்தை செலுத்தவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பேச்சைக் கேட்டு வழி நடக்கவும் முன் கோபத்தை தவிர்க்கவும்.
பரிகாரம்!
ராசிநாதன் சந்திரனுக்கு வாரந்தோறும் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் அர்ச்சனை செய்து வாருங்கள் பௌர்ணமி திதி அன்று திருப்பதி சென்று வருவதும் சிறப்பை தரும்.