Breaking News :

Sunday, February 23
.

மீனம்- ஆங்கில புத்தாண்டு 2025 ராசி பலன்கள் பரிகாரங்கள்


இந்த 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம். பொதுவாகவே மீன ராசியில் பிறந்தவர்கள் இரக்ககுணம் கொண்டவர்கள் குடும்பத்தின் மீதும் உறவினர் மீதும் அதீத பாசம் வைத்திருப்பார்கள் உறவு முறைக்குள் விரிசல் வராத வண்ணம் பார்த்துக் கொள்வார்கள் மனைவி பிள்ளைகள் பெற்றோர் மீது அன்பும் அரவணைப்பும் இருக்கும் மீன ராசிக்காரர்கள் பெரும்பாலானவர்கள் வேலை காரணமாக வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வசிப்பார்கள் தனகாரகன் ஆன குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால் பணத்தைவிட மனம் தான் பெரிது என்பீர்கள் பெரும்பாலானவர்கள் வியாபாரங்கள் /மார்க்கெட்டிங் தொழில் செய்ய விரும்புவார்கள் ஒரு இடத்தில் கைகட்டி வேலை செய்ய விரும்ப மாட்டார்கள் ராசி மண்டலத்தின் கடைசி ராசியாக மீன ராசி அமைந்திருப்பதால் உள்ளூர் விஷயங்கள் தொடங்கி உலக விஷயங்கள் வரை  அறிந்து வைத்திருப்பார்கள் மீன ராசியில் பிறந்தவர்கள் மிகுந்த அறிவும் தெளிவும் ஞானமும் மென்மையும் கலந்த அம்சத்துடன் இருப்பார்கள்.

பொதுவாகவே கடந்த வருடம் வருட கோள்கள் எதுவும் உங்கள் ராசிக்கு நற்பலன்களை வழங்கவில்லை. 18-05-2025 ல் ராகு+கேது பெயர்ச்சியில் கேதுபகவான் 7-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் இதனால் கேதுவால் நற்பலன்களை அடைவீர்கள் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் தடைபட்ட திருமணங்கள் நடக்கும் உறவு முறைக்குள் இருந்து வந்த மனஸ்தாபங்கள் அகலும்.

தேக ஆரோக்கியம் நலம் பெறும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் மனம் அமைதி பெறும் சோம்பல் விலகும் சம்பாதிக்கும் எண்ணம் அதிகமாக காணப்படும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

12-ம் இடமான இறை ஸ்தானத்தில் அமர்ந்த சனிபகவான் 29-03-2025 ல் சனி பெயர்ச்சியில் ராசிக்குள் வருகிறார் ராசிக்குள் அமர்ந்த  சனிபகவானே ஜென்மச்சனி என்பார்கள் ஜென்மச்சனியாக இருந்து பல குழப்பங்களை உண்டு பண்ணுவார் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்தவும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் வழங்க வேண்டாம் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் தேவையில்லாமல் கடன்களை வாங்கி சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள் ஆடம்பர பொருட்களை வாங்குவதை நண்பர்களே பொதுப்பலன்கள் என்பது பொதுவான பலன்களாகும் உங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகநிலைகளும் சனிபகவானுடைய இருப்பும் நன்றாக இருந்தால் கோட்ச்சார பலன் என்று சொல்லக்கூடிய பொதுப் பலன்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள தேவையில்லை பொதுபலன் என்பது 10% சுயஜாதக பலன் என்பது 90% சதவீதம் என்பதால் உங்க ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளும் திசா புத்திகளும் பார்த்து தெளிவடையவும்.

14-05- 2025 வரை குரு பகவான் ராசிக்கு 3-ம் இடத்தில் அமர்ந்திருப்பார் வரக்கூடிய குரு பெயர்சியில் ராசிக்கு 4-ம் இடத்திற்கு செல்கிறார் மூன்று மற்றும் நான்காம் இடங்கள் குரு பகவான் நற்பலன்களை வழங்க மாட்டார் குருபகவானே ஜீவனகாரகன் தொழில்காரகன் என்று வர்ணிப்பார்கள் அதனால் தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போட வேண்டாம் குருபகவான் சுபத்துவம் பெற்ற கோள் என்பதால் பெரிய பாதிப்புகளை தர மாட்டார் வீண் ஆடம்பர செலவுகளை குறைக்கவும் தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

ராசிக்குள் அமர்ந்த ராகு பகவான் இந்த ராகு+கேது பெயர்ச்சியில் 12-ம் இடமான விரைய ஸ்தானத்துக்கு பின்னோக்கி செல்கிறார் இதனால் வீண் விரையங்கள் உண்டாகும் வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் திருப்தி இருக்காது பணியிட மாற்றங்கள் எதையும் செய்ய வேண்டாம் பங்குச்சந்தை முதலீடுகள் டிரேடிங் ஆன்லைன் வியாபாரங்களில் கவனம் தேவை யாரை நம்பி பணத்தை இழக்காதீர்கள்.

தொழில் முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கலாம் சுப விரையங்களாக வீடு மனை நிலங்களில் முதலீடாக மாற்றலாம் பண பரிவர்த்தனைகளில் பத்திரப்பதிவு இல்லாமல் கொடுக்காதீர்கள்.

பெண்களுக்கு!

கணவன் மனைவிக்குள் விவாதங்கள் செய்யாதீர்கள் குடும்பத்தில் அனுசரணையாக இருக்கவும் வீண் ஆடம்பர செலவுகளை குறைக்கவும் பிள்ளைகளுடன் கனிவாக நடந்து கொள்ளுங்கள் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும் யாரிடமும் தேவையில்லாத விவாதங்கள் செய்ய வேண்டாம் குடும்ப விஷயங்களை வெளியிடங்களில் பகிர வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு!

வேலையில் மனநிறைவு இருக்காது பனிச்சுவை அதிகமாக காணப்படும் வெளியூர் பணியிடை மாற்றங்களால் மன அமைதி கேடும் மேல் அதிகாரிகளிடம் பகித்துக் கொள்ள வேண்டாம் சக ஊழியனிடம் விட்டுக் கொடுத்து போகவும்.

மாணவர்களுக்கு!
இந்த கல்வியாண்டில் சற்று போராட்டம் செய்து மதிப்பெண்கள் பெற வேண்டி வரும் அதிகாலை நேரமான பிரம்ம முகூர்த்த வேளையில் படிக்க தொடங்குங்கள் படிப்பில் ஆர்வம் காட்டுங்கள் மந்த நிலையை விரட்டுங்கள் சுறுசுறுப்பாக இருந்தால் இந்த கல்வியாண்டில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பரிகாரம்!

சித்தர்கள் ஜீவசமாதியை வணங்குவது பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நவகிரக ராகு+கேது வழிபாடும் அர்ச்சனையும்  செய்து வரவும் நல்லதே நடக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.