Breaking News :

Sunday, February 23
.

மிதுனம் - ஆங்கில புத்தாண்டு 2025 ராசி பலன்கள் பரிகாரங்கள்


இந்த 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம் பொதுவாகவே மிதுன ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்திலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள் இவர்கள் எப்பொழுதும் சிந்தனை வயப்பட்டவர்கள் ஆகவே இருப்பார்கள் தம் சிந்தனைகளை செயல்படுத்த நினைப்பார்கள் சூழ்நிலைக்கேற்ப இவர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும் பிரயாணங்களில் விருப்பம் உள்ளவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் நலனில் அக்கறை கொள்வார்கள்.

இவர்களிடம் யாருக்கும் அடி படியாத தன்மை இருக்கும் இவர்கள் குழந்தைகள் மீது அதிகம் பாசம் மிக்கவர்கள் எப்பொழுதும் விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள் இவர்கள் தங்கள் உடன் பிறந்தவர்களே உயர்வுக்காக உதவுவார்கள் தன் நிலையை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்.

வரக்கூடிய குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் இவ்வாண்டின் சிறப்புகள் என்ன என்பதை காண்போம்.

மார்ச் மாதம் 21 ஆம் தேதி வரக்கூடிய சனி பெயர்ச்சியானது ஒன்பதாம் பாவத்தில் அமர்ந்து பல தொல்லைகளை தந்து கொண்டு இருந்த சனி பகவான் தற்சமயம் பத்தாம் இடமான தொழில்தானத்துக்கு வருகிறார் இதனால் தொழில் வியாபாரங்கள் செடி படையும் பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும் வழக்குகள் வாபஸ் ஆகும் பங்காளிகளுக்குள் இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் தீரும் பழைய பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும் தந்தை மகன் உறவு பலப்படும் பத்தாம் பாவம் என்பது தொழில் ஸ்தானமாக கருதப்படுகிறது சனி பகவானை ஆயுள்காரகன் மற்றும் தொழில் காரகன் என்று வர்ணிப்பார்கள் பொதுவாகவே அசுபத்தன்மை பெற்ற ஒரு கோள் உபஜெய ஸ்தானங்களான 3,6,10,11-ம் இடங்களில் இருக்கும் பொழுது பல நன்மைகளை வாரி வழங்குவார்கள். அடுத்த 5 ஆண்டுகள் சனிபகவான் உங்கள் ராசிக்கு நன்மைகளை வாரி வழங்குவார்.

வரும் மே மாதம் வரக்கூடிய குரு பெயர்ச்சி ஆனது ராசிக்கு 12ஆம் இடமான விரய ஸ்தானத்தில் அமர்ந்து பல விரயங்களை உண்டு செய்து இருப்பார் தொழில் முடக்கம் ஏற்பட்டிருக்கும் கடன் வாங்கும் சூழல்கள் உருவாக்கி இருக்கும் தற்சமயம் குரு பெயர்ச்சி ராசிக்குள் நுழைகிறார் ராசிக்குள் இருந்தாலும் பெரிதாக நன்மைகளை வழங்க மாட்டார் 12ம் இடத்திற்கு ஒன்றாம் இடம் என்பது எவ்வளவோ மேல் .குரு ராசிக்குள் வருவதால் வீண் ஆடம்பர செலவுகள் குறைப்பது நன்று அவசர முடிவுகள் தவிர்க்கவும் தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும் தேவைக்கு மீறிய கடன் வாங்க கூடாது குடும்ப உறவுகளுக்குள் தேவையில்லாத விவாதங்கள் வரக்கூடும் யார் பிரச்சனைகளிலும் தலையிடாதீர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நலம்.

வரும் மே மாதம் 18 ஆம் தேதி வரை ராகு பகவான் ராசிக்கு அதே பத்தாம் இடத்தில் அமர்ந்து தொழில் விருத்தியும் வருமானத்தையும் தந்து கொண்டே இருப்பார் வெளிநாடு வேலைகள் வெளிநாடு தொடர்புடைய வேலை வாய்ப்புகள் உருவாகும் பங்குச்சந்தை முதலீடுகள் லாபகரமாக இருக்கும் உடல் நலக்குறைபாடுகள் நீங்கும். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் வரும் மே மாதம் முதல் ராகு பகவான் ராசிக்கு 9ஆம் இடத்துக்கு செல்வதால் வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சலும் சங்கடங்களும் வரக்கூடும் பணிச்சுமை அதிகமாக காணப்படும் பணிசுமை காலமாக நாம் வேலையை விடும் சூழல் கூட உருவாகும் வேலைவிட்டால் வேறு நல்ல வேலை கிடைப்பது கஷ்டம்.

மே மாதம் வரை கேது 4ம் இடத்தில் அமர்ந்து சங்கடங்களே தந்து கொண்டு இருந்தாலும் மே மாதத்தில் வரக்கூடிய ராகு +கேது பெயர்ச்சியில் கேது 3ம் இடமான உபஜெய ஸ்தானத்துக்கு வருகிறார் இதுவரை இருந்து வந்த சங்கடங்களும் மன சஞ்சலங்களும் நீங்கும். தாயாருடன் நல்லுறவு ஏற்படும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாடு தலங்களுக்கு சென்று வருவீர்கள் குலதெய்வ ஆசிகள் கிடைக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் லாபகரமாக அமையும்.

எதிர்பார்த்த பணம் கைக்கு கிடைக்கும் வாரா கடன்கள் வந்து சேரும் திடீர் பணவரவுகளால் பணத் தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் நடக்கும்.

பெண்களுக்கு!

மனதுக்கு இனிய செய்திகள் வந்து சேரும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சம்பள உயர்வு பதவி உயர்வும் கிடைக்கும் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு!
மனம் குதூகலம் அடையும் வெளியூர் பயணங்களால் மன மகிழ்ச்சி உண்டாகும் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும் வேலையில் திருப்தி இருக்கும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முதலீடுகளால் லாபம் உண்டாகும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்க முடியும்.
மாணவர்களுக்கு!

இந்த கல்வி ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக விளங்கும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள் நினைத்த கல்லூரியில் விருப்ப பாடப்பிரிவுகள் கிடைக்கும் வெளியூர் மற்றும் வெளிநாடுகள் சென்று கல்வி பயில முடியும்.

பரிகாரம்!
ராசி நாதனான புதனை வழிபாடு செய்து வாருங்கள் வாரந்தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் லட்சுமி நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மர் வழிபாடு சிறப்பை தரும் புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம் கேட்டை அல்லது ரேவதி நட்சத்திரத்தன்று புதனின் திருத்தலமான திருவெண்காடு சென்று தரிசனம் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.