Breaking News :

Wednesday, January 15
.

பொங்கல் பொங்கி வழியும் திசை?


உறவோடு ஒன்று கூடி புதிதாக அறுவடை செய்த புதிய அரிசியில் பொங்கல் வைக்க புதிய மண்பானை வாங்கி அதில் அரிசி கழுவிய தண்ணீருடன் பசும்பால் சேர்த்து புதிய அடுப்பில் சமநிலையில் வைத்து இளம் தீயில் எரியவிட்டு பானையில் வைத்த கழுநீரை பொங்கவிட்டு, பொங்கிவரும்போது  "பொங்கலோ பொங்கல்" என்று குலவையிட்டு கூவி மகிழ்து, சூரிய பகவானுக்கும் கதிரவனுக்கும்  நன்றி சொல்லுவார்கள்

நம் முன்னோர்கள்.

 

அப்போது பொங்கல் பொங்கிவழியும் திசையை வைத்து அந்த வருடம் முழுதும் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும்  நடக்கும் பலனை தீர்மானிக்கின்றனர்.

 

கிழக்கு –  பொங்கல் கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால், வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் பேச்சுவார்த்தைகள் நடந்தால் அது சுமூகமாக நடக்கும். ஏதேனும் பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதனை வாங்கி மகிழ்வீர்கள். உடை மற்றும் ஆபரணங்கள் சேரும் வாய்ப்புகள் அதிகம்.

 

#மேற்கு – பொங்கல் மேற்கு பக்கத்தில் பொங்கி வழிந்தால், சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். மகன் – மகளுக்கு மகளுக்கு வரன் தேடுபவராக இருந்தால் இந்த வருடத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சுப செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதை குறிக்கும்.

 

வடக்கு – பொங்கல் வடக்கு திசையில் பொங்கி வழிந்தால் பண வரவு அதிகரிக்கும். நீங்கள் பதவி உயர்வு அடைவீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து சம்மந்தமாக பேச்சுகள் நிறைவாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் போக வாய்ப்புகள் அதிகம். கொடுத்த கடன் எந்த தடங்கலும் இன்றி கைக்கு வந்து சேரும்.

 

தெற்கு-தெற்கு திசையில் பொங்கல் பொங்கி வழித்தால் பிணி என்றே சொல்லலாம். அந்த வருடம் முழுவதும், மருத்துவ செலவுகள் அதிகம் இருக்கும். உடல் நிலையில் அதிக சோர்வு காணப்படும். சுப காரியங்களில் சற்று தாமதம் ஏற்படும். எனவே உடல்நிலையில் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நலம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.