பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள் கடின உழைப்பாளியாகளாக இருப்பார்கள் இயற்கையாகவே சாது குணம் கொண்டிருப்பார்கள் கலைத்துறை மற்றும் இசைத்துறையில் நாட்டம் அதிகம் இருக்கும் இவர்கள் மத்தியான வயதில் தான் சுகபோகங்களை அனுபவிப்பார்கள் எந்த விஷயத்திலும் துக்கங்களையும் கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புத்தன்மையும் இவர்களிடம் அதிகமாக இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருப்பார்கள். இவர்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை தரும் பொது காரியங்களில் இவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும் அதே போல் எந்த ஒரு பொது விஷயத்திலும் வந்தோம் போனோம் என்று இல்லாமல் எல்லா வேலைகளும் முன் நின்று செய்வார்கள்.துணிச்சலும் தீரமும் மிக்கவர்கள்.
வருட பலன்கள் என்பது வருட கோள்கள் ஆன சனிபகவான் குருபகவான் ராகு +கேது வைத்து சொல்லக்கூடிய பலன்கள் ஆகும் இந்த நான்கு கோள்களும் ஜோதிடத்தில் மிக முக்கியமாக கருதப்படுகிறது.
இந்த வருடம் ஆதாயம் பெறக்கூடிய ராசிகளில் உங்கள் ரிஷப ராசியும் ஒன்று மார்ச் மாதம் வரக்கூடிய சனி பெயர்ச்சியும் மே மாதத்தில் வரக்கூடிய குரு பெயர்ச்சி மற்றும் ராகு +கேது பெயர்ச்சி வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை தரும் பெரிய இலக்கை அடைய முடியும் மனபாரங்கள் குறையும் நினைத்த காரியம் யாவும் வெற்றியைத் தேடித் தரும்.
29-03-2025 சனிபெயர்ச்சியில்
10ம் வீட்டில் இருந்த சனிபகவான்
லாப ஸ்தானமான 11ம் இடத்துக்கு வருகிறார் இதனால் தொழில் வளம் பெருகும் கூட்டுத் தொழில் மூலமாக நல்ல வருமானத்தை பெறுவீர்கள் பண சேமிப்புகள் உண்டாகும் அரசியல் செல்வாக்கு கூடும் அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் போட்டி தேர்வில் எளிதாக வெற்றி பெறுவீர்கள் வெளியூர் பயணங்களால் மனமகிழ்ச்சி உண்டாகும் கூட்டுத்தொழில் மூலமாக லாபம் இரட்டிப்பாகும் சொத்து பிரச்சனைகள் கோர்ட் கேஸ் வழக்குகள் வாபஸ் ஆகும் அல்லது நமக்கு சாதகமான தீர்ப்பை வரும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பீர்கள்.
உடல்நல குறைபாடுகள் சரியாகும் மருத்துவ விரைய செலவுகள் குறையும் தேக ஆரோக்கியம் காணப்படும் மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் எச்சரிக்கையாக இருப்பீர்கள்.
கடந்த வருட காலமாக ராசிக்குள் இருந்த குரு பகவான் மே மாதம் பத்தாம் தேதி இரண்டாம் இடமான தனஸ்தானத்திற்கு செல்கிறார் இதனால் தடை பட்ட திருமணங்கள் தடையின்றி நடக்கும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் புதிய முதலீடுகளால் லாபம் இரட்டிப்பு ஆகும் மன மகிழ்ச்சி சந்தோஷம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும் வீடு மனை நிலங்கள் மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும் கடன் சுமை இருந்தால் கடன்கள் விரைவில் அடைபடும்.
18-05-2025 ல் வரக்கூடிய ராகு+கேது பெயர்ச்சியில் ராகு நன்மைகளை தரக்கூடிய கோள் ஆகும் உங்கள் ராசிக்கு கடந்த வருடம் 11-ம் இடத்தில் இருந்த ராகுபகவான் இந்த பெயர்ச்சியால் 10ம் இடத்துக்கு பின்னோக்கி செல்கிறார் 10 மற்றும் 11ஆம் இடங்கள் ராகு பகவான் நன்மைகளை வழங்குவார். இவ்வருடவும் அதேபோலவே ராகு பகவான் நற் பலன்களை வழங்குவார் 10-ம் இடம் என்பது தொழில் ஸ்தானமாக கருதப்படுவதால் புதிய தொழில் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் வெளிநாடு மற்றும் வெளிநாடு தொடர்புடைய தொழில்கள் நல்ல லாபத்தை தரும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் நல்ல வருமானத்தை தரும் அலோபதி மருத்துவம் மற்றும் மெடிக்கல் ஷாப் மருத்துவ உபகரணங்கள் சினிமா தொழில் கலைத்துறை புகைப்படத்துடன் லாபகரமாக இருக்கும் பங்குச்சந்தை மிகப்பெரிய ஏற்றத்தை தரும் டிரேடிங் ஆன்லைன் வியாபாரங்கள் மிகப்பெரிய லாபத்தை தரும்.
கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் கேதுவால் பலன்கள் இல்லை மே மாதம் வரை 5ம் இடத்தில் இருந்த கேது 4,ம் இடத்துக்கு பின்னோக்கி வருவதால் பெரிய நன்மைகளை தராது நான்காம் வீடு என்பது மாதுர் ஸ்தானம் தாய் ஸ்தானமாக கருதப்படுவதால் தாயாரின் உடல் நலத்தில் அடிக்கடி பிரச்சினைகள் வரக்கூடும் மருத்துவ செலவுகள் உண்டாகும் தாயாரிடம் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.வீடு மனை நிலங்கள் வாங்கும் பொழுது பத்திரப்பதிவுகளில் மிகுந்த கவனம் செலுத்தவும் தீர ஆராய்ந்த பிறகே நிலங்களில் முதலீடு செய்ய முடியும் பண பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை ஜாமின் கையெழுத்துக்கள் தவிர்க்கவும்.
பெண்களுக்கு!
கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் குடும்ப உறவுக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும் ஒற்றுமை உண்டாகும் பண சேமிப்புகள் நகையை சேமிப்புகள் உண்டாகும் மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும் திருமணங்கள் குழந்தை பாக்கியம் தடை இன்றி கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு!
வேலை மாற்றத்தால் மன மகிழ்ச்சி உண்டாகும் சம்பள உயர்வு கிடைக்கும் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள் வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகளால் லாபம் பன்மடங்கு உயரும் தொழில் வியாபாரங்கள் செவிப்படையும்.
மாணவர்களுக்கு!
ஞாபக சக்தி அதிகமாக காணப்படும் சுறுசுப்பாக காணப்படுவீர்கள்.கல்வியில் நினைத்த இலக்கை அடைய முடியும் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.மேற்படிப்பு படிக்க சிறந்த கால கட்டம் வெளிநாடு சென்று பயில யோகம் உண்டு.
பரிகாரம்!
வாரந்தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் விக்ன விநாயகரை வழிபாடு செய்யுங்கள் அனுமானுக்கு உங்கள் பெயரில் ஒரு அர்ச்சனை செய்து வாருங்கள் அமாவாசை அல்லது பௌர்ணமி திதி அன்று குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவதும் சிறப்பை தரும்.